முதல்நாள் ஏறி மறுநாள் விலை குறையும் தங்கம்..!! இப்போ தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? – Allmaa
செய்திகள் முதல்நாள் ஏறி மறுநாள் விலை குறையும் தங்கம்..!! இப்போ தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 10:28 [IST] Share This Article சென்னையில் தங்கம் விலை ஒரு நாள் ஏறுவது மறுநாள் குறைவது என தொடர்ந்து ஆட்டம் காட்டி வருகிறது. இதனால் தங்கம் தற்போது வாங்கலாமா வேண்டாமா என மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 1600 ரூபாய் விலை உயர்ந்தது. அவ்வளவுதான் இனி தங்கம் விலை தொடர்ந்து உயரப் போகிறது என மக்கள் கலக்கமடைந்த நிலையில் இன்று திடீரென விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 11,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 11,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல ஒரு சவரன் தங்கம் நேற்று 92,800…