பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
செய்திகள் பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 8:34 [IST] Share This Article பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3,000 ரூபாய் வழங்குகிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகமும் தொடங்குகிறது. இந்நிலையில் பலரும் தங்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என கூறுகின்றனர். தங்களுடையது அரிசி ரேஷன் அட்டையாக இருந்த போதிலும் இதுவரை டோக்கன் வழங்கப்படவில்லை, எனவே எங்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காதா என குழப்பத்தில் உள்ளனர்.ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாகவே தங்கள் கடைகளுக்கு உட்பட்ட அரிசி அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு…
