ஜன நாயகன் சென்சார்.. அந்த ஒரு வார்த்தைதான் பிரச்னையா? தளபதிக்கு இது ஒன்னும் புதுசு இல்லையே!
News oi-Staff By Mohanraj Thangavel Published: Wednesday, January 7, 2026, 8:15 [IST] Share This Article
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜன நாயகன். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பகவந்த் கேசரி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இது. படம் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக உள்ளார்கள். ஆனால் படத்திற்கு இன்னும் சென்சார் கிடைக்காதது பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஜன நாயகன் விஜயின் கடைசி படம் என்று அவரே அறிவித்துவிட்டார். அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ளனர். ஜன நாயகன் படத்தை பொறுத்தவரை இன்னும் சென்சார் சான்றிதழ் வாங்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது அரசியலாக சில காரணங்கள் சொல்லப்பட்டாலும், படத்தின் வசனங்களில் சில பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Photo Credit: KVN Productions
வசனங்கள்: அதாவது டிரைலரில் இடம் பெற்ற ஆங்கில வார்த்தையான O-M மற்றும் தமிழில் இடம் பெற்ற உயிர்த்தெழவே முடியாத சிலுவையில் அறையனும் என்பதுதான் என்று கூறப்படுகிறது. இதில் O-M என்பது இந்து மக்களின் ஆன்மீக சொல்லான ஓம் என்ற வார்த்தையை பிரதிபலிப்பது போல உள்ளது. மேலும் O-M என்று சொல்லிவிட்டு அதை அழிவு என்று குறிப்பிடுவது என்பது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் என்று சென்சார் தரப்பில் கூறுவதாகவும் இந்த வார்த்தைகளை நீக்கச் சொல்லுவதாகவும் கூறப்படுகிறது.
பிரச்னைகள்: அதேபோல், உயிர்த்தெழவே முடியாத சிலுவையில் அறையனும் என்ற வசனம் கிறிஸ்தவ மக்களின் மனதை புண்படுத்தலாம் எனவே, சர்ச்சைக்குரிய வசனங்களை படக்குழுவினர் நீக்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த இரண்டு வசனங்களில் O-M என்ற வார்த்தையை நீக்குவது என்பது ரொம்ப சிரம மானது என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது. அதாவது, O-M என்ற சொல் வசனமாக மட்டும் இல்லாமல், படம் முழுவதும் வில்லன் கதாபாத்திரம் வரும் இடங்களில் எல்லாம் சின்னமான இடம் பெற்றுள்ளதால் இதை நீக்குவது சிரமம் என்று படக்குழு போராடி வருவதாக கூறப்படுகிறது.
Photo Credit: KVN Productions
ரசிகர்கள் நம்பிக்கை: நீதிமன்ற வழக்கு முடிந்து, படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து, படத்தின் புக்கிங்கை எப்போது தொடங்குவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இன்று வழக்கு விசாரணை நடைபெறுவதால் இன்றே தீர்ப்பு அளிக்கப்பட்டால் படத்தின் ரிலீஸ் குறித்த விவரம் தெரியவரும்.
Credit: Filmibeat
Share This Article English summary
Two Dialogues Are Major Problem Of To Get Censor Of Vijay Jana Nayagan
Two Dialogues Are Major Problem Of To Get Censor Of Vijay Jana Nayagan Story first published: Wednesday, January 7, 2026, 8:15 [IST] Other articles published on Jan 7, 2026
