மின்சார கார்களுக்கு அதிகபட்சம் ரூ.3.80 லட்சம் வரை சலுகை அறிவித்தது டாடா நிறுவனம்!!

carf8-1770375817

  செய்திகள்

மின்சார கார்களுக்கு அதிகபட்சம் ரூ.3.80 லட்சம் வரை சலுகை அறிவித்தது டாடா நிறுவனம்!!

News oi-Devika Manivannan By Published: Friday, February 6, 2026, 16:35 [IST] Share This Article

இந்தியாவில் மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மின்சார கார்களை போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு நிறுவனங்களும் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.

டெஸ்லா, வின்ஃபாஸ்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மின்சார கார்கள் இந்திய சந்தைக்குள் நுழைந்துவிட்ட நிலையில் உள்நாட்டு நிறுவனங்கள் தற்போது போட்டி போட்டுக் கொண்டு மின்சார கார்களுக்கான விலைகளை குறைத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி வாகன விற்பனை நிறுவனமான டாடா தங்களுடைய மின்சார கார்களுக்கு அதிகபட்சமாக 3.8 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்துடன் இந்த தள்ளுபடி முடியும் என தெரிவித்துள்ளது.

மின்சார கார்களுக்கு அதிகபட்சம் ரூ.3.80 லட்சம் வரை சலுகை அறிவித்தது டாடா நிறுவனம்!!

நெக்ஸான் (Nexon) : நெக்ஸான் மின்சார கார்களுக்கு அதிகபட்சமாக 1.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2024, 2025இல் தயாரிக்கபட்ட chassis model கார்களுக்கு அதிகபட்ச சலுகை கிடைக்கும். 2026ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட நெக்ஸான் மின்சார கார்களுக்கு 30,000 வரை தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Readதங்க சந்தையே தலைகீழா மாறி இருக்கு..!! முதலீட்டாளர்களே உஷார்..!! எச்சரிக்கும் நிபுணர்..!!தங்க சந்தையே தலைகீழா மாறி இருக்கு..!! முதலீட்டாளர்களே உஷார்..!! எச்சரிக்கும் நிபுணர்..!!

டியாகோ (Tiago) : டியாகா மின்சார கார்களுக்கு டாடா நிறுவனம் 1.5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. டாடாவின் மலிவு விலை மின்சார கார்களாக டியாகா மாடல் கார்கள் இருக்கின்றன. இதில் 2024 மற்றும் 2025இல் தயாரிக்கப்பட்ட chassis model கார்களுக்கு 1.5 லட்சம் ரூபாயும், 2026இல் தயாரிக்கப்பட்ட மாடல் கார்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹேரியர் (Harrier) : டாடாவின் விலைமதிப்பு மிக்க மின்சார கார் இது. இதில் 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட அனைத்து மாடல்களுக்கும் 1.5 லட்சம் ரூபாய் தள்ளுபடி அறிவித்திருக்கிறது. இது தவிர லாயல்டி போனஸும் கிடைக்குமாம்.

மின்சார கார்களுக்கு அதிகபட்சம் ரூ.3.80 லட்சம் வரை சலுகை அறிவித்தது டாடா நிறுவனம்!!

பன்ச் (Punch) : டாடாவின் புகழ்பெற்ற மின்சார கார் இது. இதில் 2024,2025இல் தயாரிக்கப்பட்ட chassis model கார்களுக்கு 1.6 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். 2026 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பன்ச் கார்களுக்கு 90,000 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For Youதங்கம் விலையை பத்தி கவலைப்படாதீங்க..! இத ஃபாலோ பண்ணா உங்க பணம் பெருகும்- முகேஷ் அம்பானி அறிவுரைதங்கம் விலையை பத்தி கவலைப்படாதீங்க..! இத ஃபாலோ பண்ணா உங்க பணம் பெருகும்- முகேஷ் அம்பானி அறிவுரை

கர்வ் (Curvv) : டாடா நிறுவனத்தில் அதிகமாக தள்ளுபடி பெற்ற மின்சார கார் இது தான். இந்த மாடல் கார்களுக்கு 3.8 லட்சம் ரூபாய் வரை அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 2024, 2025 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட chassis model கார்களுக்கு 3.3 லட்சம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. அதே போல 2026 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு 2.8 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடியும். மற்ற அனைத்து வகையான கார்களுக்கும் 3.8 லட்சம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி கிடைக்கும் என டாடா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Share This Article English summary

Tata Motors Offers EV Discounts Up to Rs 3.8 Lakh in Feb 2026 on Punch, Nexon, Curvv, Harrier

Tata Motors has launched significant discounts for February 2026 on its electric vehicle lineup, excluding Tigor EV, with benefits applicable to both MY25 and MY26 models. Story first published: Friday, February 6, 2026, 16:35 [IST] See More On: டாடா, மின்சார கார், tata, discount, electric car Other articles published on Feb 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *