Parasakthi Day 1 Box Office – பராசக்தி முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்புதே!
News oi-Staff By Karunanithi Vikraman Published: Sunday, January 11, 2026, 5:10 [IST] Share This Article
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும், சென்சார் சொன்ன திருத்தங்களுடனும் நேற்று இந்தியாவில் வெளியான படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே கிடைத்துவருகின்றன. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளான நேற்று எத்தனை கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமரன், மதராஸி படங்களுக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இது அவருக்கு 25ஆவது படமாகும். இதனை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பிருத்வி என பலர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் சிவாவுக்கு 25ஆவது படம். ஜிவி பிரகாஷுக்கு நுறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ரிலீஸ்: படமானது நேற்று திரையரங்குகளில் வெளியானது. மொத்தம் 25 இடங்களில் சென்சார் அதிகாரிகள் திருத்தத்தை சொன்னார்கள். அவை அனைத்தையும் ஏற்று கட், மியூட் போட்டு ரிலீஸ் செய்யப்பட்டது பராசக்தி. அதேசமயம் வெளிநாடுகளில் வெளியான படத்தில் எந்த கட்டும் இல்லை. இங்கே பல திருத்தங்களுடன் படம் வெளியானாலும் ரசிகர்கள் படையெடுத்து படம் பார்க்க தியேட்டர்களுக்கு சென்றார்கள். சொல்லப்போனால் திருவிழா போல் கொண்டாடினார்கள்.
Photo Credit: Dawn Pictures
படம் சூப்பராக இருக்கிறது: இதற்கிடையே விஜய்யின் ஜனநாயகன் திரைப்படமும் வெளியாகவில்லை என்பதால் இப்படத்துக்கு கூடுதல் திரையரங்குகள் கிடைத்தன. மொத்தம் 700க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் வெளியானதாக தெரிகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது முழு ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். உணர்வுப்பூர்வமான கதையை சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றி; போர் அடிக்காமல் இயக்குநர் கொண்டு சென்று வெற்றி பெற்றுவிட்டதாக ரசிகர்கள் சொல்லிவருகிறார்கள்.
பராசக்தி பொங்கல்.. இந்த படத்தோட வெற்றிக்கு காரணமே இதுதான்.. சிறுமியை கை காட்டி சுதா கொங்கரா குஷி!
சிவா, ரவி மோகன் கெத்து: படத்தின் தூண்களாக ரவி மோகனும், சிவகார்த்திகேயனும் விளங்குகிறார்கள். படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி காட்சிவரை அவர்கள்தான் படத்தை தாங்கினார்கள் எனவும்; அதர்வாவும் தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் எனவும் கொண்டாடுகிறார்கள். பேரறிஞர் தொடர்பான வசனங்கள், மற்ற இடங்களில் எல்லாம் மியூட் போடப்பட்டாலும், அவை தூக்கப்பட்டிருந்தாலும் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்ட லிஸ்ட் தெரிந்துவிட்டதால்; அந்த இடங்களில் தேவையான வசனத்தையோ, வார்த்தையையோ போட்டு நிரப்பி கொள்கிறார்கள் ரசிகர்கள்.
வசூல் விவரம்: விமர்சன ரீதியாக பெரும்பாலானவர்களால் படம் ரசிக்கவேப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் பராசக்தி முதல் நாளில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி நேற்று இந்தியாவில் மட்டும் மொத்தம் 11.50 கோடி ரூபாய் (11 கோடியே 50 லட்சம் ரூபாய்) வசூலை அள்ளியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அமரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் (இந்தியாவில் 21 கோடி ரூபாய்) சாதனையை இப்படம் முறியடிக்காவிட்டாலும்; பெரும்பாலும் பாசிட்டிவ் டாக்குகளே வந்திருப்பதால் வரும் நாட்களில் இன்னமும் வசூலை அள்ளும் என்று நம்பப்படுகிறது.
Credit: Filmibeat
Share This Article English summary
Parasakthi Day 1 Box Office Collection is 11.50 Crore in India Sivakarthikeyan Movie Became a super hit
Sivakarthikeyan’s Parasakthi, directed by Sudha Kongara, opens strong at the box office with 11.50 crore India Day 1 collection. Positive reviews boost momentum despite censor cuts. Story first published: Sunday, January 11, 2026, 5:10 [IST] Other articles published on Jan 11, 2026
