Breaking: Gold Rate Today in Chennai: 22 carat Gold price and silver price Today December 7

goldratedec7-1765070362-1765090167

 

Gold Rate Today: தங்கம் விலை எகிற போவதை யாராலும் தடுக்கவே முடியாது.. இன்றைய ரேட் என்ன!

Gold Rate oi-Staff By Vigneshkumar Updated: Sunday, December 7, 2025, 9:28 [IST] Share This Article

சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து நிதனமாகவே இருந்து வந்தது. பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த வெள்ளிக்கிழமை இரு முக்கிய ரிப்போர்ட்கள் வெளியானது. இதை வைத்துப் பார்க்கும் போது தங்கம் விலை வரும் நாட்களில் உயரும் என்றே தெரிகிறது. அதேபோல இன்று தங்கம் விலை என்னவாக இருக்கிறது என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.

இந்தாண்டு தொடக்கம் முதல் நாம் சற்று திரும்பிப் பார்த்தோம் என்றால் தங்கத்தை போல வேறு எதுவுமே பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை. இந்தாண்டு தொடக்கத்தில் ஏற ஆரம்பித்த தங்கம் அதன் பிறகு குறையவே இல்லை. தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வந்தது. இந்தாண்டு மட்டும் சுமார் 67% வரை தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.


தங்கம் விலை எகிற போவதை யாராலும் தடுக்கவே முடியாது.. இன்றைய ரேட் என்ன

தங்கம்

முதல் 10 மாதங்கள் தங்கம் விலை கேப் விடாமல் உயர்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் தான் அது சற்றே நிதானமாக மாறியது. பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது. இரு நாட்கள் விலை ஏறினால் அடுத்த இரு நாட்கள் விலை சரிவது என இருந்தது. இதனால் தங்கம் விலையில் பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது.

அமெரிக்கப் பணவீக்கம்

ஆனால், இப்போது தங்கம் விலையில் மாற்றம் தென்பட ஆரம்பித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இரு முக்கிய ரிப்போர்ட்களே இதற்குப் பிரதானக் காரணமாகும். முதலில் அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த டேட்டா வெளியானது. அதில் பணவீக்கம் மிக அதிகளவில் உயரவில்லை என்பது உறுதியானது. இதனால் வரும் 10ம் தேதி நடக்கும் அமெரிக்க பெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு அதிகம். அப்படி வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை உயரும்.

அடுத்த 6 மாதத்தில் 60% எகிறும் தங்கம் விலை? இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்! என்ன இப்படி சொல்லிட்டாரு

ரெப்போ வட்டி விகிதம்

அதேபோல கடந்த வெள்ளிக்கிழமை நமது ரிசர்வ் வங்கியும் தனது ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்திருந்தது. ரெப்போ வட்டி விகிதம் 5.5%ல் இருந்து 5.25%ஆகக் குறைக்கப்பட்டது. பொதுவாகவே வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் பணப் பழக்கம் அதிகரித்து பணவீக்கம் உயரலாம். அப்படி நடந்தால் தங்கம் விலை உயரும். இப்படிக் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இரு விவகாரங்களுமே தங்கம் விலைக்குச் சாதகமாகவே இருந்தது

இன்றைய தங்கம் விலை

இதன் காரணமாக நேற்று சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது. நேற்றைய தினம் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.96,320க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,040க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் தான் இன்றும் விற்பனையாகிறது. அதாவது சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.12,040க்கும் சவரனுக்கு ரூ.96,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“ஆபத்து..” இனி இந்த தங்கத்தை வாங்க வேண்டாம்.. பேரிடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்! அப்போ போட்ட பணம்?

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000

04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160

03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480

02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580

30.11.2025- ஒரு சவரன் ரூ.95,840

29.11.2025-ஒரு சவரன் ரூ.95,840

Credit: Oneindia

Share This Article English summary

Gold Rate Today in Chennai: 22 carat Gold price and silver price Today December 7

Gold Rate Today and siler rate today (தங்கம் விலை இன்று) [7 December 2025]: நிலையாக நிற்கும் தங்கம் விலை Story first published: Sunday, December 7, 2025, 6:49 [IST]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *