Breaking: ரூ. 1.75 கோடி கடன்.. வட்டியால் ரூ. 147 கோடியான விபரீதம்! மாத வட்டி கொடுத்த ஷாக் ட்விஸ்ட்!

befunky-collage-2025-12-31t114148-071-1767161560

  World

ரூ. 1.75 கோடி கடன்.. வட்டியால் ரூ. 147 கோடியான விபரீதம்! மாத வட்டி கொடுத்த ஷாக் ட்விஸ்ட்!

World oi-Pugazharasi S By Updated: Wednesday, December 31, 2025, 11:48 [IST] Share This Article

கடன் வாங்கும்போது இனிப்பாகவும், அதை திருப்பி செலுத்தும் போது கசப்பாகவும் இருக்கும் என்பார்கள். ஆனால் ஒரு மனிதன் வாங்கிய 1.75 கோடி ரூபாய் கடன், 147 கோடி ரூபாயாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா, ஆம் மாதத்திற்கு 4% வட்டி தானே என்று அலட்சியமாக இருந்தவருக்கு, அந்த வட்டியே இன்று வாழ்நாள் முழுவதும் தீர்க்க முடியாத ஒரு பெரிய மலைபோன்ற சுமையாக மாறியுள்ளது.

ஒரு சாதாரண கடன் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது, கூட்டு வட்டியின் கோரமுகம் இவ்வளவு மோசமானதா, இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தின் பின்னணியையும், கடன் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய பாடத்தையும் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

ரூ. 1.75 கோடி கடன்.. வட்டியால் ரூ. 147 கோடியான விபரீதம்! மாத வட்டி கொடுத்த ஷாக் ட்விஸ்ட்!

நடந்தது என்ன?

சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் கடந்த 2010ம் ஆண்டு, உரிமம் பெற்ற ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து 2.5 லட்சம் சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1.75 கோடி கடன்) கடன் பெற்றுள்ளார். அந்த கடனுக்கான வட்டி மாதம் 4% ஆகும், தாமத கட்டணம் 8% ஆகும். மாதம் தோறும் இந்திய மதிப்பில் சுமார் 1.75 லட்சம் ரூபாய் (2500 சிங்கப்பூர் டாலர்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக 4 ஆண்டுகளில், அவர் வாங்கிய கடன். அசல் தொகையை விட பலமடங்காக உயர்ந்தது. இது 2014ம் ஆண்டில் 21 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதன்பிறகும் வட்டிக்கு வட்டி, அபராதம் என கணக்கிடப்பட்டு, 2021ம் ஆண்டு வாக்கில் அந்த கடன் தொகையானது கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு, கருணையே இல்லாத அளவு 147 கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது.

வீட்டை விற்றும் முடியாத பிரச்சனை?

ஒரு கட்டத்தில் தன்னால் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என உணர்ந்து கொண்ட அந்த நபர், தனக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை, அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனருக்கே ஜூலை 2016ம் ஆண்டு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார். வீட்டை விற்பனை செய்து கடனை அடைத்து விட்டால் பிரச்சனை முடிந்து விடும் என நினைத்த நபருக்கே, அங்கு தான் பெரிய ட்விஸ்ட் இருக்கிறது, இன்னும் பிரச்சனை அதிகரிக்க போகிறது என தெரியவில்லை போல..

வீட்டை விற்பனை செய்தாலும், அந்த வீட்டிலேயே வாடகைக்கு இருக்க, அதை வாங்கிய இயக்குனரிடமே ஒப்பந்தமும் செய்துள்ளார். அதற்காக மாதம் 5 முதல் 6 லட்சம் வரை வாடகை செலுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் வீட்டை விற்பனை செய்த பிறகும் கடனை சுமையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருந்திருக்கிறது.

பிரச்சினைக்கு மேல் பிரச்சினை?

அதாவது வீட்டை விற்பனை செய்த ஒப்பந்தத்தில், அந்த நபர் மாதம் 5 – 6 லட்சம் வாடகைக்கு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடன் பிரச்சனையால் தத்தளித்த அந்த நபர், சரியான நேரத்தில் வாடகை கொடுக்க முடியாமலும் தவித்து வந்திருக்கிறார். இந்த சூழலில் தான் வாடகை பாக்கி மற்றும் வீட்டை காலி செய்ய மறுத்த விவகாரத்தில் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, 1.75 கோடி ரூபாய் கடன் எப்படி பல கோடிகளாக மாற முடியும்? இது மனசாட்சியை உலுக்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் கூறிய முக்கிய கருத்துக்கள்?

வெறும் 1.75 கோடி ரூபாய் கடன் எப்படி 147 கோடி ரூபாய் கடனாக வளர முடியும். இந்த கடன் ஒப்பந்தத்தில் ஏதோ மோசடி அல்லது சட்ட விரோதமான செயல்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார். அதோடு வீட்டு விற்பனை ஒப்பந்தம் என்பது ஒரு கண்துடைப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டுள்ளது. மேலும் அதிக வட்டி வசூலிப்பதை தடுக்கும் சட்டங்கள் இதில் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய மீண்டும் ஒரு விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது?

கந்து வட்டி மற்றும் அதிக வட்டி வசூலிக்கும் நிறுவனங்களிடம் கடன் வாங்கும்போது, அதன் கூட்டு வட்டி மற்றும் அபராத கட்டணங்கள், நம் மொத்த சொத்தையே அழித்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகப்பெரிய சாட்சி. ஆக கடன் வாங்கும் போது வட்டி விகிதம், தாமதக் கட்டணம் ஆகியவற்றை தெளிவாக படிக்க வேண்டும். கையெழுத்திடும் முன் சரியான நிபுணர்களுடன் ஆலோசிப்பது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை விட, இருப்பதை வைத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ்வது எல்லோருக்கும் நல்லது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

How did a Rs 1.75 crore loan grow into a Rs 147 crore debt at a 4% monthly interest rate?

A Rs 1.75 crore loan exploded to Rs 147 crore due to 4% monthly interest compounded with 8% late fees and heavy penalties over 11 years, creating a massive debt trap. Story first published: Wednesday, December 31, 2025, 11:42 [IST]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *