சவுதி அரேபியாவில் வேலை பாக்குறீங்களா..? சொந்த வீடு வாங்க செம சான்ஸ்.. சட்டத்தில் புதிய மாற்றம்..!
World oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 16:26 [IST] Share This Article
சவுதி அரேபியாவில் வசிக்க விரும்பும் வெளிநாட்டினருக்கு இருந்த மிகப் பெரிய தடைகளில் ஒன்று, சொந்தமாக சொத்து வாங்க முடியாதது தான். ஆனால், விஷன் 2030 திட்டத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிட்டு வரும் சவுதி அரசு, தற்போது ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த தயாராகி வருகிறது. அது மட்டும் சரியாக நிறைவேறிவிட்டால், அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டினரும் சவுதி அரேபியாவில் நிலம் மற்றும் கட்டிடங்களை வாங்க முடியும். இருப்பினும் அதற்கு சில நிபந்தனைகளையும் சவுதி அரசு விதித்துள்ளது.

சவுதியில் சொத்து வாங்கலாம்?
குறிப்பாக சவுதியில் உள்ள முக்கிய நான்கு நகரங்கள் தவிர்த்து( Makkah, Jeddah, Madinah and riyadh), சவுதியின் பிற பகுதிகளில், இனி பிற நாட்டினர் சொத்துக்களைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். இது சவுதியின் ரியல் எஸ்டேட் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம். குறிப்பாக சர்வதேச முதலீட்டாளர்களைப் சவுதியின் பக்கம் திருப்பவும் உதவிகரமாக இருக்கும். அதோடு சவுதியில் குடியேற விரும்பும், முதலீடு செய்ய விரும்பும் புதிய சட்டம் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கான குடியிருப்பு உரிமை
அமல்படுத்தப்படவுள்ள புதிய சட்டம், சவுதி அரேபியாவில் வசிக்கும் சவுதி அல்லாத தனிப்பட்ட நபர்கள், ஒரு குடியிருப்புச் சொத்தை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கிறது. இருப்பினும் அனுமதியானது மக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு புனித நகரங்களுக்குள் பொருந்தாது. இந்த இரண்டு புனித நகரங்களிலும் சொத்துரிமை முஸ்லிம்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆக வரையறுக்கப்பட்ட உரிமை மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் சொத்து வாங்கலாம்.
நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு அமைப்புகளுக்கான விதிகள்
பட்டியலிடப்படாத நிறுவனங்கள்: சவுதி நிறுவன சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட, வெளிநாட்டு உரிமை கொண்ட பட்டியலிடப்படாத நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட மண்டலங்களுக்குள், மக்கா மற்றும் மதீனா உட்பட சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கலாம்.
இந்த நிறுவனங்கள் தங்களின் வணிகச் செயல்பாடுகளுக்காகவோ அல்லது ஊழியர் குடியிருப்புக்காகவோ, அந்த மண்டலங்களுக்கு வெளியே கூட சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கலாம். இது விதிமுறைகளால் வரையறுக்கப்படும்.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிதிகள்
பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், முதலீட்டு நிதிகள் மற்றும் சிறப்பு நோக்கம் கொண்ட நிறுவனங்கள், தலைநகர் சந்தை ஆணையம் மற்றும் ரியல் எஸ்டேட் பொது ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து பிற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, புனித நகரங்கள் உட்பட சவுதி அரேபியா முழுவதும் சொத்துக்களைச் சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப்படும்.
கட்டணங்கள், பதிவு மற்றும் அபராதங்கள்
சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு அப்பால் கூடுதல் சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்பதை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. இது பிரீமியம் குடியுரிமைத் திட்டம் அல்லது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) ஒப்பந்தங்களின் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை பாதிக்காது.
மேலும் சவுதி அல்லாத அனைத்து தனிநபர்களும், நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட பதிவுகளை செய்ய வேண்டும். அதோடு ரியல் எஸ்டேட் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட பின்னரே சொத்துரிமை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும். இந்த பரிவர்த்தனைக்கு கட்டணமாக வெளிநாட்டு உரிமையாளருக்கு சொத்தின் மதிப்பில் 5% வரை பரிவர்த்தனைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
சவுதி அரசின் விதிகளை மீறி சொத்துக்களை வாங்குபவர்களுக்கு அபராதங்கள் அல்லது எச்சரிக்கைகள் விதிக்கப்படலாம். அதோடு சொத்து வாங்கும் போது தவறான தகவலை சமர்ப்பித்தால், சுமார் 22 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். அது மட்டும்மல்ல, சில சமயங்களில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்தச் சொத்தை விற்க வேண்டிய கட்டாயம் கூட ஏற்படலாம். ஆக சொத்து வாங்கும் முன்னரே அனைத்து விவரங்களையும் தெளிவாக புரிந்து கொண்டு, பின்னர் திட்டமிடல் சிறப்பு.
அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் இந்தச் சட்டம், இந்திய முதலீட்டாளர்களுக்கு சவுதியின் ரியல் எஸ்டேட் சந்தையில் கால் பதிக்க ஒரு துணிச்சலான மற்றும் பாதுகாப்பான வழியை வழங்குகிறது. ஆனால், முதலீடு செய்வதற்கு முன், சவுதியின் நிர்வாக விதிமுறைகள் மற்றும் இந்தியாவின் அன்னியச் செலாவணி விதிமுறைகளை முழுமையாகப் புரிந்து கொண்டு, நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது மிக முக்கியம்.
Share This Article English summary
Big Change in the Gulf: Saudi Arabia may allow foreigners to own property from 2026
Saudi Arabia will allow foreigners to own property in regions other than the four major Saudi cities (Makkah, Jeddah, Madinah, and Riyadh). Story first published: Tuesday, December 16, 2025, 16:26 [IST] Other articles published on Dec 16, 2025
