ஐடி ஊழியர்களே எல்லாமே மாறப் போகுது!! Anthropic உடன் இணைந்து இன்போசிஸ் செய்த தரமான சம்பவம்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, February 17, 2026, 14:30 [IST] Share This Article
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தங்களுடைய பணியில் ஏஐ கருவிகளை ஒருங்கிணைப்பதிலும், தங்கள் வாடிக்கையாளர்களின் ஐடி சேவையில் ஏஐ மாற்றத்தை கொண்டு வரவும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.
இன்போசிஸ், டிசிஎஸ் என முன்னணி நிறுவனங்கள் ஏஐ போட்டியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் இதில் இன்போசிஸ் நிறுவனத்துக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் அமெரிக்காவை சேர்ந்த Anthropic என்ற ஏஐ நிறுவனத்துடன் கைகோர்த்து இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஏஐ ஆய்வு மற்றும் தீர்வு நிறுவனம் தான் Anthropic.

அண்மையில் Anthropic நிறுவனம் தங்களின் கிளாட் ஏஐ மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ கருவி ஐடி நிபுணர்களுக்கு நிகராக செயல்படுவதால் ஐடி நிறுவனங்கள் வீழ்ச்சி அடைய போகின்றன என்ற அச்சம் ஏற்பட்டு உலகம் முழுவதுமே ஐடி நிறுவன பங்குகள் சரிய தொடங்கின. இந்தியாவிலும் டிசிஎஸ், இன்போசிஸ் என ஐடி நிறுவன பங்குகள் தரை தட்டின.
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனம் Anthropic நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு தேவையான நவீன என்டர்பிரைஸ் சார்ந்த ஏஐ தயாரிப்புகளை Anthropic நிறுவனம் வழங்க உள்ளது. டெலி கம்யூனிகேஷன் மற்றும் நிதி சேவைகள்,உற்பத்தி, மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இன்போசிஸ் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏஐ சார்ந்த தயாரிப்புகளையும் தீர்வுகளையும் வழங்க Anthropic உடன் இணைந்துள்ளது.

முதல் கட்டமாக டெலி கம்யூனிகேஷன் பிரிவில் இணைந்து செயல்பட போகிறோம் என இரண்டு நிறுவனங்களும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன. ஏஐ சாட் பாட்டுகளாக மட்டுமில்லாமல் சுதந்திரமாக இயங்கும் வகையிலான ஏஐ ஏஜெண்டுகளை இரண்டு நிறுவனங்களும் உருவாக்க உள்ளன. இன்போசிஸ் நிறுவனம் தங்களுடைய டெலி கம்யூனிகேஷன் சார்ந்த வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு இந்த ஏஐ ஏஜெண்டுகளை டெலிவரி செய்து பயன்படுத்த இருக்கிறது.
Also Read
பட்ஜெட்: இனி உங்க மாவட்டத்திலேயே ஐடி வேலை- டைடல் பூங்காக்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!
அடுத்த கட்டமாக நிதி சேவைகள், உற்பத்தி மற்றும் மென்பொருள் மேம்பாட்டு துறைகளிலும் இரண்டு நிறுவனங்களும் செயல்பட இருக்கின்றன. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து இந்திய பங்குச் சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வேகமாக உயர தொடங்கியது. இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 5 சதவீதம் வரை உயர்ந்து 1431 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
Recommended For You
மொத்தமும் போச்சு!! பிட்காயின் முதலீட்டாளர்கள் தலையில் துண்டு!! கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை!!
இன்போசிஸ் நிறுவன பங்கு உயர்ந்ததால் மற்ற ஐடி பங்குகளும் மீண்டு வந்து நிப்டி ஐடி குறியீடும் வேகமான மீட்சியை காட்டியது. இதனிடையே Anthropic நிறுவனத்தின் கிளாட் மாடலை பயன்படுத்த இருப்பதாக இன்போசிஸ் கூறியுள்ளது. இந்த வகை ஏஐ ஏஜெண்டுகள் க்ளைம்களை ப்ராசசிங் செய்வது, கோட் ஜெனரேட் செய்வது , டெஸ்டிங் ,ரிவ்யூ ஆகிய அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இனி இன்போசிஸ் ஊழியர்கள் ஏஐ ஏஜெண்டுகளோடு அதிகமாக இணைந்து செயல்பட வேண்டி இருக்கும்.
Share This Article English summary
Infosys Stock Jumps 5% on Anthropic AI Deal, Boosts Nifty IT by 2%
Infosys shares climbed nearly 5% after announcing a strategic partnership with Anthropic to integrate Claude AI models into its Topaz offerings, driving the Nifty IT index up over 2% to 33,423.65. Story first published: Tuesday, February 17, 2026, 14:30 [IST] See More On: it, infosys, ai, ஐடி, இன்போசிஸ் Other articles published on Feb 17, 2026
