ITC-யால் எல்ஐசி-க்கு நேர்ந்த மெகா இழப்பு! 2 நாளில் ரூ. 11,400 கோடி காணாமல் போனது எப்படி? – Allmaa

befunky-collage-2026-01-02t184343-284-1767359660

  Market update

ITC-யால் எல்ஐசி-க்கு நேர்ந்த மெகா இழப்பு! 2 நாளில் ரூ. 11,400 கோடி காணாமல் போனது எப்படி?

Market Update oi-Pugazharasi S By Published: Friday, January 2, 2026, 18:44 [IST] Share This Article

ஒரே ஒரு தீக்குச்சி மொத்தக் காட்டையும் பொசுக்குவது போல, அரசாங்கத்தின் ஒரு வரி உயர்வு அறிவிப்பு எல்ஐசி-யின் பல்லாயிரம் கோடி இழப்புக்கு வழிவகுத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐடிசி (ITC) நிறுவனம், அரசின் சிகரெட் வரி உயர்வால் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது. இதில் எல்ஐசி-யும் தப்பிக்கவில்லை. வெறும் 48 மணி நேரத்தில் ஐடிசி பங்கின் மதிப்பு 14% சரிந்து, சுமார் 72,000 கோடி சந்தை மதிப்பை காலி செய்துள்ளது. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இதில் பெரும் பங்குகளை வைத்திருக்கும் எல்ஐசி (LIC) நிறுவனம் மட்டும் சுமார் 11,460 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இருப்பினும் இனியாவது இப்பங்கானது மீண்டு வருமா? இதிலிருந்து சிறு முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ITC-யால் எல்ஐசி-க்கு நேர்ந்த மெகா இழப்பு! 2 நாளில் ரூ. 11,400 கோடி காணாமல் போனது எப்படி?

ஏன் கடும் சரிவு?

2026ம் ஆண்டு தொடக்கமானது ஐடிசி முதலீட்டாளர்களுக்கு அவ்வளவு இனிமையாக பிறந்து விட வில்லை. கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் மட்டும் ஐசிசி பங்குகள் 14% வரை சரிவைக் கண்டுள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்கு விலையானது, குறைந்தபட்ச விலையை எட்டியுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு மத்திய அரசின் புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரியை அதிரடியாக உயர்த்தியதே காரணமாக பார்க்கப்படுகிறது.

எல் ஐ சி-க்கு எப்படி இழப்பு?

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளரான எல் ஐ சி, செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி ஐடிசி நிறுவனத்தில் சுமார் 15.86% அல்லது 1,98,58,07,233 பங்குகளை வைத்துள்ளது. இந்த சூழலில் தான் ஐடிசி-யின் 14% சரிவால், 11,460 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இருப்பினும் இப்பங்கானது மீண்டும் ஏற்றம் காணும்போது இந்த இழப்பை ஈடு கட்டிக் கொள்ளலாம்.

எவ்வளவு வரி உயர்வு?

மத்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கையின் படி, பிப்ரவரி 1, 2026ல் இருந்து சிகரெட்டின் நீளத்தை பொறுத்து 1,000 எண்ணிக்கையில் உள்ள கட்டுகளுக்கு 2,050 முதல் 8,500 ரூபாய் வரையில் கூடுதல் கலால் வரியானது விதிக்கப்பட உள்ளது. இது ஏற்கனவே அமலில் உள்ள 40% ஜிஎஸ்டி வரிக்கும் அதிகமாகும். இந்த வரி அதிகரிப்பானது சிகரெட் உற்பத்தியாளர்களுக்கு நிச்சயம் பின்னடைவாக அமையலாம். ஏனெனில் உற்பத்தியாளர்கள் சிகரெட் விலையை அதிகரிக்க இது வழிவகுக்கலாம். இது சிகரெட் தேவையை குறைக்க வழிவகுக்கலாம். இதனால் விற்பனையும் குறையலாம் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது நிறுவனங்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த சூழலில் தான் ஐடிசி பங்கானது கடும் சரிவை கண்டுள்ளது.

மார்கன் ஸ்டான்லி அறிக்கையின் படி, சிகரெட் விலையை நிறுவனங்கள் 40% வரையில் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என கூறியுள்ளது. இதே நுவாமா தரகு நிறுவனமானது வரி அதிகரிப்பால் சிகரெட் விற்பனையானது 3 – 9% வரையில் குறையலாம் என தெரிவித்துள்ளது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், விலை அதிகரிக்கும் போது கள்ளச்சந்தையில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகின்றனர்.

11 பேர் எதிர்மறையான கணிப்பு?

வரி அதிகரிப்பு மத்தியில் ஐடிசி பங்கு குறித்து ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி, கோல்ட்மேன் சாச்ஸ், ஜேபி மார்கன், மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட தரகு நிறுவனங்கள் ஐடிசி பங்கை டவுன் கிரேட் செய்துள்ளன.

நுவாமா தரகு நிறுவனம் வாங்கலாம் என்பதில் இருந்து ஹோல்டு செய்யலாம் என்றும், இலக்கு விலையை 415 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. மோதிலால் ஆஸ்வால் தரகு நிறுவனமும் நியூட்ரல் என டவுன் கிரேட் செய்துள்ளது. இலக்கு விலையையும் 400 ரூபாயாக கொடுத்துள்ளது. தற்போதைய சூழலில் இப்பங்கானது அதன் 52 வார குறைந்தபட்ச விலையான 350.10 ரூபாய்க்கு அருகில் காணப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

How did a single government tax update wipe out Rs 11,400 crore from LIC’s portfolio in just 48 hours?

LIC’s investment in ITC plunged by over Rs 11,460 crore within two days following a 14% stock crash. The decline was triggered by a surprise government hike in tobacco excise duties. Story first published: Friday, January 2, 2026, 18:44 [IST] Other articles published on Jan 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *