Jana Nayagan: எலெக்ஷன் வரைக்கும் ஜன நாயகன் ரிலீஸ்க்கு வாய்ப்பே இல்லை.. அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு
News oi-Staff By Mohanraj Thangavel Updated: Sunday, February 15, 2026, 6:28 [IST] Share This Article
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி 10ஆம் தேதியே ரிலீஸ் ஆவதாக இருந்த படம் ஜன நாயகன். ஆனால் படத்திற்கு இதுவரை சென்சார் கிடைக்காததால் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் படம் ஜனவரி 9ஆம் தேதியே உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று உலகம் முழுவதும் புக்கிங் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் படம் ரிலீஸ் இல்லை என்று சொன்னதும் படத்திற்கு புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று பலரும் நம்பிக் கொண்டு இருக்கையில் திடீரென வந்து விழுந்துள்ளது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு. அதாவது கனடாவில் படத்தை ரிலீஸ் செய்யும் யோர்க் சினிமாஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஜன நாயகன் படம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இங்கு ரிலீஸ் ஆகாது. எனவே இதுவரை டிக்கெட் முன்பதிவு செய்து அதற்கான பணத்தை திரும்பப் பெறாதவர்கள் தயவு செய்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இது தொடர்பாக தியேட்டரிலும் சென்று விசாரிக்கலாம். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும், நமது மெம்பர்ஷிப் வைத்திருப்பவர்களுக்கு டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30 வரை ஜன நாயகன் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவு பெறும் வரை படம் வெளியாகாது என்பது உறுதியாகிவிட்டதால் ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க சென்சார் நிறுவனம் தாமதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் மனுதாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தது. வழக்கில் ஆஜரான சென்சார் நிறுவனம் சென்சார் விதிகளுக்கு உட்பட்டுத்தான் நாங்கள் செயல்படுகிறோம். அதை மீறி எங்களால் செயல்பட முடியாது என்று தெரிவித்தது. அதன் பின்னர் இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு, சென்சார் வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்சார் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து விசாரித்ததால் படத்தை ஜனவரி 9ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனால் உலகம் முழுவதும் முன்பதிவான டிக்கெட்டுகளுக்கான பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டைத் தவிர மற்ற டிக்கெட்டுகளுக்கு தியேட்டர்கள் பணத்தை திருப்பிக் கொடுத்தன.
படத்திற்கு சென்சார் வாங்க ரிவைசிங் கமிட்டிக்குச் செல்ல படக்குழு தயாராக இருப்பதாகவும், இந்திய ராணுவத்தினரும் படம் பார்த்து அவர்கள் சொல்லும் கருத்துக்களையும் படக்குழு ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இப்படியான தகவல்களால் ரசிகர்கள் படம் வெளியாகிவிடும் என்று ஆர்வத்துடன் இருந்தார்கள். இப்படி இருக்கையில் படம் ஏப்ரல் 30 வரை படம் வெளியாகாது என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
Credit: Filmibeat
Share This Article English summary
Vijay Jana Nayagan Will Not Release Before April 30th Official Announcement From Distributors
Vijay Jana Nayagan Will Not Release Before April 30th Official Announcement From Distributors Story first published: Sunday, February 15, 2026, 5:22 [IST] See More On: notification
