மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசு பெற உதவும் ரேஷன் அட்டை:வீட்டில் இருந்தே விண்ணப்பம் செய்வது எப்படி?
Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 7, 2026, 14:09 [IST] Share This Article
ரேஷன் அட்டைகள் நமக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு உதவுகின்றன. ஆனால் அது மட்டுமல்ல ரேஷன் கார்டுகள் நம்முடைய அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் இருப்பவர்கள் என்றால் மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு தொகை போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும் முக்கியமான ஒரு ஆவணமாக ரேஷன் கார்டு தான் பயன்படுத்தப்படுகிறது.
ரேஷன் கார்டு அடிப்படையில் தான் திட்டத்தின் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் வரவழைக்கப்படுகிறது, பொங்கல் பரிசு தொகை போன்ற பணமும் கிடைக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றால் உங்களுடைய குடும்பத்திற்கு ரேஷன் கார்டு வைத்திருப்பது பல்வேறு அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு வழிவகை செய்யும்.

ஒருவேளை இதுவரை உங்களிடம் ரேஷன் கார்டு இல்லை, இப்பொழுது தான் திருமணமாகி இருக்கிறது என்பவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்காக நீங்கள் அலுவலகங்களுக்கு சென்று அலைந்து திரிய வேண்டிய அவசியம் கிடையாது. உங்கள் வீட்டில் இருந்தபடியே புதிதாக ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்ய முடியும். இதற்கு உங்களிடம் இணைய இணைப்பும் லேப்டாப் அல்லது ஒரு ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்.
புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முதலில் தேவையான ஆவணங்களை நீங்கள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப தலைவரின் புகைப்படம் 5 எம்பிக்குள் இருக்க வேண்டும். அடுத்ததாக உங்களுடைய முகவரிக்கான சான்றினை பதிவேற்றம் செய்வது அவசியம். இதற்கு ஆதார் அட்டை, மின்சார கட்டண ரசீது, சமையல் எரிவாயு இணைப்பு ரசீது, வீட்டு வரி ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்தால் போதும்.
Also Read
தங்க சந்தையே தலைகீழா மாறி இருக்கு..!! முதலீட்டாளர்களே உஷார்..!! எச்சரிக்கும் நிபுணர்..!!
மேலும் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டை விவரங்களையும் நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்களிடம் கேஸ் இணைப்பு இருக்கிறது என்றால் அதன் நுகர்வோர் எண் மற்றும் அதன் நிறுவனம் சார்ந்த விவரங்களையும் பதிவேற்றம் செய்வது அவசியம். முதலில் இதற்காக நீங்கள் https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான இந்த இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் முகப்பு பக்கத்திலேயே புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற லிங்க் இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய குடும்ப தலைவர் விவரம் அதாவது குடும்பத் தலைவரின் பெயர், குடும்ப தலைவரின் தந்தை அல்லது கணவரின் பெயர், வீட்டு முகவரி ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழியிலும் உள்ளீடு செய்ய வேண்டும். எந்த மாவட்டம், எந்த வட்டம், எந்த கிராமம் என்பதையும் உங்கள் பகுதிக்கான அஞ்சல் குறியீட்டையும் உள்ளிட வேண்டும்.
Recommended For You
ரயில் பயணிகளே மார்ச் 1 முதல் UTS செயலி இயங்காது!! இனி இந்த செயலியில் மட்டுமே டிக்கெட் பதிவு!!
இதனை அடுத்து தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும் பின்னர் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வழங்கிவிட்டு குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை படிப்படியாக உள்ளிட வேண்டும். இப்படி அனைத்து தகவலையும் உள்ளிட்ட பிறகு உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். ஆய்வு முடிந்த பிறகு உங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டால் நீங்கள் கொடுத்த அந்த மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும்.
You May Also Like
தங்கம் விலை சவரன் ரூ.92,000 ஆக சரிகிறதா? Rich Dad Poor Dad எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி புது கணக்கு!!
அதன் பிறகு ஆன்லைனிலேயே நீங்கள் ஸ்மார்ட் கார்டை பதிவிறக்கம் செய்து உங்கள் பகுதி கடைகளில் சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும் ஏற்கனவே எந்த ஒரு ரேஷன் கார்டிலும் உங்களுடைய பெயர் இருக்கக் கூடாது. ஒருவேளை திருமணமான பெண்கள் என்றால் உங்களுடைய தாயார் வீட்டில் இருக்கும் ரேஷன் அட்டையில் உங்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கான சான்றிதழை இதில் இணைக்க வேண்டும்.
Share This Article English summary
Tamil Nadu New Ration Card Application: Simple Online Guide 2026
Residents of Tamil Nadu can apply for a new Smart Family Ration Card via the TNPDS portal by submitting proof of residence, Aadhaar cards, and photos. Story first published: Saturday, February 7, 2026, 14:09 [IST] See More On: aadhaar, ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை, ஆதார் Other articles published on Feb 7, 2026
