தங்க வேட்டையில் டெதர்! 140 டன் தங்கம்.. உலக நாடுகளுக்கே சவால் விடும் கிரிப்டோ ஜாம்பவான்! – Allmaa

befunky-collage48-1769751332

  World

தங்க வேட்டையில் டெதர்! 140 டன் தங்கம்.. உலக நாடுகளுக்கே சவால் விடும் கிரிப்டோ ஜாம்பவான்!

World oi-Pugazharasi S By Published: Friday, January 30, 2026, 11:05 [IST] Share This Article

கிரிப்டோ உலகில் ஸ்டேபிள்காயின் என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் டெதர் (USDT). ஆனால், இப்போது அந்த பெயர் டிஜிட்டல் திரைகளை தாண்டி, நிஜ உலக தங்கச் சுரங்கங்களையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத வகையில், அமைதியாக செயல்பட்டு வந்த டெதர் நிறுவனம், தற்போது 140 டன் தங்கத்தை தனது கையிருப்பில் குவித்து, உலகளாவிய தங்கச் சந்தையின் மிகப்பெரிய பிளேயர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளது.

இது வெறும் சேமிப்பு அல்ல. உலக நாடுகளின் மத்திய வங்கிகளுக்கே சவால் விடும் ஒரு பிரம்மாண்டமான நிதி வலிமை. கிரிப்டோ சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், தனது ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சுவிட்சர்லாந்தின் ரகசிய அணுசக்தி பாதுகாப்பு பெட்டகங்களில் இந்த தங்க குவியலை டெதர் பாதுகாத்து வருகிறது. ஒரு கிரிப்டோ நிறுவனம், பல நாடுகளின் தங்க இருப்பை விட அதிக தங்கம் வைத்திருப்பது உலக நிதி வல்லுநர்களையே புருவம் உயர்த்த செய்துள்ளது. டிஜிட்டல் கரன்சி, இப்போது டிஜிட்டல் தங்கமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த சுவாரசியமான பின்னணியை விரிவாகப் பார்ப்போம்.

தங்க வேட்டையில் டெதர்! 140 டன் தங்கம்.. உலக நாடுகளுக்கே சவால் விடும் கிரிப்டோ ஜாம்பவான்!

இது உண்மையா?

கிரிப்டோ உலகின் ஜாம்பவனான டெதர் ஹோல்டிங்ஸ் (Tether Holdings), கடந்த ஓராண்டாக தங்கத்தை பெரும் அளவில் குவித்து, உலக தங்க சந்தையையே அதிர வைத்து வருகிறது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவ்லோ ஆர்டோய்னோ ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் நாங்கள் விரைவில் உலகின் மிகப்பெரிய தங்க மத்திய வங்கிகளில் ஒன்றாக மாறப் போகிறோம். அதாவது, ஒரு நாட்டின் மத்திய வங்கி எந்த அளவிற்கு தங்கத்தை இருப்பில் வைத்திருக்குமோ, அந்த அளவிற்கு ஒரு தனியார் நிறுவனமான டெதர் உயர்ந்துள்ளதக கூறுகிறார்.

எவ்வளவு மதிப்பு தெரியுமா!

கடந்த ஓராண்டில் மட்டும் டெதர் நிறுவனம் 70 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கியுள்ளது. இந்த கையிருப்பு மற்றும் தங்கம் சார்ந்த ஸ்டேபிள்காயினான XAUT-ஐ வலுப்படுத்த பயன்படுத்தப்பட்டது. இந்த கொள்முதல் அளவு, உலகின் மூன்று மிகப்பெரிய தங்கம் சார்ந்த ‘எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள்’ (ETFs) வாங்கியதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டெதர் வசம் உள்ள 140 டன் தங்கத்தின் மதிப்பு, இன்றைய சந்தை விலையில் சுமார் 23 பில்லியன் டாலராகும்(சுமார் ரூ.1.9 லட்சம் கோடி). மத்திய வங்கிகள் மற்றும் பெரிய வங்கிகளுக்கு வெளியே, ஒரு தனிப்பட்ட நிறுவனம் இவ்வளவு பெரிய அளவிலான தங்கத்தை வைத்திருப்பது இதுவே முதல்முறை.

வாரத்திற்கு ஒரு டன் தங்கம்!

ஒவ்வொரு வாரமும் ஒரு டன்னுக்கும் அதிகமான தங்கத்தை டெதர் நிறுவனம் தொடர்ந்து வாங்கி வருகிறது. இந்த வேகம் இன்னும் இருந்து வருகிறது. அடுத்த சில மாதங்களுக்கு இதே வேகத்தில் தங்கம் வாங்குவோம். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சந்தையை ஆய்வு செய்து, கொள்முதல் அளவை நிறுவனம் தீர்மானிக்கும் என ஆர்டோய்னோ கூறியுள்ளார்.

சுவிஸ் அணுசக்தி பாதுகாப்பு பெட்டகத்தில் தங்கம்?!

டெதர் தனது தங்கத்தை மிகவும் விசித்திரமான முறையில் பாதுகாத்து வருவதாக கூறும் ஆர்டோய்னோ, சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பழைய அணுசக்தி பாதுகாப்பு பெட்டகத்தில் (Nuclear Bunker) பல அடுக்கு எஃகு கதவுகளுக்கு பின்னால் இந்த தங்கம் வைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல மிகவும் திகைப்பாக இருக்கும் என கூறுகிறார்.

வெறுமனே தங்கத்தை சேமிப்பது மட்டுமல்லாமல், ஜேபி மார்கஸ் சாஸ் & கோ மற்றும் HSBC போன்ற உலகின் மிகப்பெரிய வங்கிகளுக்கு போட்டியாக தங்க வர்த்தகத்தில் இறங்கவும் டெதர் திட்டமிட்டுள்ளது. டெதர் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது வெளியானதும், டெதரின் தங்கம் சார்ந்த காயினான XAUT, கடந்த 24 மணி நேரத்தில் 3.99% உயர்ந்தது. மேலும் இது கிரீஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் ஒட்டுமொத்த தங்க இருப்பை விட அதிகமாக இருப்பதால், உலக அளவில் அதிக தங்கம் வைத்துள்ள முதல் 30 இடங்களில் டெதர் இணைந்துள்ளது.

Share This Article English summary

How did Tether quietly transform into a top-tier global player in the gold market with its 140-ton bullion reserve?

Tether has quietly amassed 140 tons of gold worth $23 billion, surpassing nations like Australia and rivaling central banks to secure its dominant global position. Story first published: Friday, January 30, 2026, 11:05 [IST] Other articles published on Jan 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *