Gold Rate Today in Chennai: 22 carat Gold price and silver price Today January 18

collage-1768700776-1768736484

 

Gold Rate Today: மெகா “இன்ப” செய்திக்கு ரெடியா.. தங்கம் விலையில் பெரிய மாற்றம்? இன்று விலை என்ன

Gold Rate oi-Staff By Vigneshkumar Updated: Sunday, January 18, 2026, 9:50 [IST] Share This Article

சென்னை: தங்கம் மீதான முதலீடுகள் சீராக உயர்ந்து வரும் நிலையில், அது தொடர்ச்சியாகப் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இப்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்றே குறைந்துள்ள சூழலில், இந்தியச் சந்தையில் அது எப்படி எதிரொலிக்கும்.. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இன்றைய தினம் தங்கம் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்!

இந்தியாவில் எப்போதுமே பொதுமக்களுக்குத் தங்கம் தான் முதல் சேமிப்பாக இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். ஏழை முதல் பணக்காரர்கள் வரையிலும் அனைவருமே நமது நாட்டில் தங்கத்தை வாங்கி வைப்பார்கள். கலாச்சார ரீதியாக ஒரு காரணம் இருக்கும் அதேநேரம் ஆபத்தான சூழல்களில் தங்கம் கை கொடுக்கும் என்பது மற்றொரு காரணமாகும்!


தங்கம்

தங்கம் விலை கடந்தாண்டு வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டிருந்தது. இந்தாண்டாவது தங்கம் விலை குறையும் என ஆர்வமாகப் பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இருப்பினும், இந்தாண்டு தங்கம் விலை பெரியளவில் குறையவில்லை. தொடர்ந்து அது சீராக உயர்ந்தே வருகிறது. நேற்று சனிக்கிழமை கூட தங்கம் விலை இந்தியாவில் +உயர்ந்தே இருந்தது.

சர்வதேச சந்தை

சர்வதேச அளவில் பார்க்கும்போது தங்கம் விலை சற்று குறைந்தே இருக்கிறது. சுமார் 1% வரை தங்கம் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று பொதுவாகவே தங்கம் விலை குறுகிய காலத்தில் அதிகம் உயரும்போது, முதலீட்டில் குறிப்பிட்ட பகுதியை விற்று முதலீட்டாளர்கள் லாபம் பார்ப்பார்கள். இதை profit booking என்பார்கள். இதுவே தங்கம் விலை மாற்றத்தில் முக்கிய காரணமாகும்.

அதேபோல சர்வதேச அரசியல் பதற்றங்களும் மெல்லச் சீராகி வருகிறது. ஈரான், கொலம்பியா நாடுகள் மீது ராணுவ நடவடிக்கையை எடுப்பேன் எனச் சொல்லி வந்த டிரம்ப் தனது டோனை மாற்றி இருக்கிறார். சர்வதேச புவிசார் அரசியல் சூழல்கள் சீராகி இருப்பதும் தங்கம் விலை சர்வதேச சந்தையில் சரிய இன்னொரு காரணமாக இருக்கிறது. அதேநேரம் இது இந்தியாவில் எதிரொலிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இன்றைய விலை

நேற்றைய தினம் தங்கம் விலை சென்னையில் தங்கம் கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் அதிகரித்து 13,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 1,06,240 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதில் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை

18.01.2026 – ஒரு சவரன் ரூ.1,06,240

17.01.2026 – ஒரு சவரன் ரூ.1,06,240

16.01.2026 – ஒரு சவரன் ரூ.1,05,840

15.01.2026 – ஒரு சவரன் ரூ.1,06,320

14.01.2026 – ஒரு சவரன் ரூ.1,06,240

13.01.2026 – ஒரு சவரன் ரூ.1,05,360

12.01.2026 – ஒரு சவரன் ரூ.1,04,960

11.01.2026 – ஒரு சவரன் ரூ.1,03,200

10.01.2026 – ஒரு சவரன் ரூ.1,03,200

09.01.2026 – ஒரு சவரன் ரூ.1,02,400

08.01.2026 – ஒரு சவரன் ரூ.1,02,200

07.01.2026 – ஒரு சவரன் ரூ.1,02,600

06.01.2026 – ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 – ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)

05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)

04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)

02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320

01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580

Credit: Oneindia

Share This Article English summary

Gold Rate Today in Chennai: 22 carat Gold price and silver price Today January 18

Gold Rate Today and siler rate today (தங்கம் விலை இன்று) [18 January 2025]: தங்கம் விலை சரிய வாய்ப்பு என தகவல் Story first published: Sunday, January 18, 2026, 7:16 [IST]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *