பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்.. சவுதியில் முதலீடு செய்யும் அருமையான வாய்ப்பு..!!
World oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 8, 2026, 20:48 [IST] Share This Article
சவுதி அரேபியா என்றாலே நம் நினைவுக்கு வருவது கச்சா எண்ணெய் தான். ஆனால், இனி அந்த பிம்பம் மாறப்போகிறது.. தனது பொருளாதாரத்தை எண்ணெய்க்கு அப்பால் கொண்டு செல்லும் ‘விஷன் 2030’ (Vision 2030) திட்டத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியா தனது நிதிச் சந்தையின் கதவுகளை உலகிற்காக திறக்க திட்டமிட்டுள்ளது.
வருகிற 2026 பிப்ரவரி 1 முதல், எவ்வித கடுமையான கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து வகை வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சவுதி பங்குச் சந்தையில் (Tadawul) நேரடியாக முதலீடு செய்யலாம் என அந்நாட்டின் மூலதனச் சந்தை ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுவரை இருந்து வந்த தகுதி வாய்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்’ (QFI) என்ற நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்படுவதால், இனி சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் சவுதியின் வளர்ச்சிப் பாதையில் பங்கெடுக்க முடியும். வளைகுடா நாடுகளின் நிதி மையமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சவுதி எடுத்துள்ள இந்த மாஸ்டர் பிளான் உலக முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சவுதியின் சூப்பர் அறிவிப்பு!
சவுதியின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் சவுதியின் மூலதனச் சந்தை ஆணையம் (CMA) தெரிவித்துள்ளது. இது அந்த நாட்டிற்குள் வெளிநாட்டு நிதி வரவை அதிகரிப்பதோடு, சந்தையின் பணப்புழக்கத்தையும் மேம்படுத்த உதவிகரமாக இருக்கும்.
இது கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதை குறைப்பதற்கான பொருளாதாரத் திட்டத்தில் பாதியை கடந்துள்ள சவுதி அரேபியா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளுடன் இணைந்து எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் ஃபண்டுகளை நிறுவுவது உட்பட பல்வேறு வழிகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க முயன்று வருகிறது.
பெரிய மாற்றம் இருக்குமா?
கடந்த ஆண்டு மக்கா மற்றும் மதீனாவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகளை வெளி நாட்டினர் வாங்க கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி கொடுத்தனர். இருப்பினும் நிலத்தை நேரடியாகச் சொந்தமாக்கிச் கொள்வதில் உள்ள கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. இந்த சூழலில் தான் சில தினங்களுக்கு முன்பு சவுதி அரசானது மேற்கண்ட சவுதி பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யலாம் என்ற அறிவிப்பை கொடுத்துள்ளது. இருப்பினும் இந்த மாற்றத்தினால் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது என ஜேபி மார்கன் தெரிவித்துள்ளது. ஏனெனில் கிட்டத்தட்ட அனைத்து பெரிய முதலீட்டாளர்களும் அங்கு முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் முக்கியமான மாற்றம், வெளிநாட்டு உரிமை வரம்பு (Foreign ownership limits) தொடர்பான திருத்தம் தான். அது சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜேபி மார்கன் தனது குறிப்பில் தெரிவித்துள்ளது. இது ஒரு வகையில் சரியானது தான் என்றாலும், மறுபுறம் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க வழிவகுக்கலாம்.
நல்ல வாய்ப்பு!
இதுவரை சவுதி சந்தையில் பெரிய நிறுவனங்கள் (Institutional Investors) மட்டுமே நுழைய முடிந்தது. ஆனால் அடுத்த மாதம் முதல் விதிகள் தளர்வதால், சர்வதேச பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் செயலிகள் (Apps) மூலம் சாமானியர்களும் சவுதி நிறுவனங்களின் (உதாரணமாக Saudi Aramco) பங்குகளை நேரடியாக வாங்கும் வாய்ப்பு உருவாகும். மேலும் சவுதி அரேபியா ஏற்கனவே ஹாங்காங் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து இடிஎஃப்-க்களை (ETFs) தொடங்கியுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் சவுதி சந்தையைச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அல்லது ETF-கள் வர வாய்ப்புள்ளது. அதன் மூலம் சிறிய தொகையிலிருந்தே முதலீடு செய்ய முடியும்.
மக்கா மற்றும் மதீனாவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டினர் வாங்கலாம் என்பது ஒரு பெரிய வாய்ப்பு. புனித நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், அங்கு நடக்கும் வணிகத்தின் லாபத்தில் சாமானியர்களும் பங்கு பெற முடியும்.
முன்னதாக, சவுதி நிறுவனங்களில் வெளிநாட்டினருக்கான 49% முதலீட்டு வரம்பை அரசு தளர்த்தக்கூடும் என்ற செய்தியால், கடந்த செப்டம்பரில் சவுதி பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தன. இருப்பினும் கடந்த ஆண்டு சவுதி பங்குச்சந்தை குறியீடு (TASI) 12.8% சரிவைச் சந்தித்தது, மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 1.9% சரிந்துள்ளது என்று LSEG தரவுகள் தெரிவிக்கின்றன.
Share This Article English summary
Saudi Arabia plans to open financial market to all foreign investors next month
Starting next month, Saudi Arabia is taking a historic step to open its $2.6 trillion stock market (Tadawul) to all categories of international investors. Story first published: Thursday, January 8, 2026, 20:48 [IST] Other articles published on Jan 8, 2026
