மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..

மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..

  World

மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..

World oi-Devika Manivannan By Published: Friday, November 14, 2025, 15:32 [IST] Share This Article

அமெரிக்கா: திறன்மிகு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து வேலை செய்வதை குறைக்க வேண்டும், அமெரிக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவிற்கு வெளிநாட்டவர்கள் வருகை தருவது, குடியுரிமை பெறுவது, வேலைவாய்ப்பு பெறுவது ஆகியவற்றை கட்டுப்படுத்தி பல நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்1பி விசா உள்ளிட்ட விசாக்கள் மூலம் வெளிநாட்டவர்களை அமெரிக்கா வரவழைத்து வேலைக்கு அமர்த்துவதை கட்டுப்படுத்தியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களும் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்துவது என பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..

தன்னுடைய இந்த நடவடிக்கை அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை ஏற்படுத்தி தரும் என்பது டிரம்பின் நம்பிக்கை. ஆனால் டிரம்பின் இந்த செயல் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுக்கும் சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது. திறன்மிகு ஊழியர்கள் கிடைக்காமல் நிறுவனங்கள் தல்லாடி வருவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது .

அமெரிக்காவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு போன்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜிம் ஃபேர்லி பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அமெரிக்காவில் திறன்மிகு ஊழியர்களுக்கு பெரிய தட்டுப்பாடு இருப்பதாக உண்மையை வெளிப்படுத்தினார் .

ஃபோர்டு நிறுவனத்திலேயே 5000 மெக்கானிக் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் கூட இந்த வேலைக்கு திறன்மிகு ஊழியர்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார். ஃபோர்டு நிறுவனத்தில் மட்டுமல்ல பல்வேறு துறைகளிலும் இதே சூழல் தான் காணப்படுகிறது என கூறுகிறார் .

Also Readதாறுமாறாக உயர்ந்த உணவு பொருட்களின் விலை..! இறக்குமதி வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப்!!தாறுமாறாக உயர்ந்த உணவு பொருட்களின் விலை..! இறக்குமதி வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப்!!

எமர்ஜென்சி சர்வீசஸ் எனப்படும் அவசரகால சேவை பணிகள், லாரி இயக்குவது ,தொழிற்சாலைகளில் வேலை செய்வது ,எலக்ட்ரீசியன் , பிளம்பர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் கிட்டதட்ட 10 லட்சம் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் அதற்கு திறன்மிகு ஆட்கள் கிடைக்காமல் தவித்து வருவதாகவும் கூறியிருக்கிறார் . இது ஒரு மிகத் தீவிரமான விஷயம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கக்கூடிய கல்வி முறை வேலைவாய்ப்புக்கு தேவையான திறன்களை வழங்குவதில்லை என கூறி இருக்கிறார் . ஒரு நபரை ஃபோர்டு நிறுவனத்திற்கு கொண்டு வந்து முறையாக பயிற்சி தந்து அவர் ஒரு சிறந்த மெக்கானிக்காக உருவாவதற்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்படுகிறது என கூறும் அவர் அமெரிக்கா கண் விழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

Recommended For You2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!

ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் தான் ஒரு காலத்தில் அமெரிக்காவின் அடையாளம், இது போன்ற நிறுவனங்கள் தான் அமெரிக்காவையே உருவாக்கின ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது என்கிறார். இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் ஹெச்1 பி விசா மீதான பார்வையை மாற்றி வருகிறது.

ஹெச்1பி விசாவில் வேலைக்கு வர கூடிய இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கர்களின் வேலைகளை பறிக்கிறார்கள் என கூறி வந்த டிரம்ப் திடீரென ஹெச்1பி விசா மூலம் திறன் மிகு நபர்கள் அமெரிக்கா வருவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

Share This Article English summary

US is facing critical shortage of skilled labour reveals Ford CEO

Ford CEO Jim Farley says that US is facing a critical shortage of skilled labour, with the automaker struggling to fill 5,000 mechanic positions despite offering salaries of up to Rs 1 crore Story first published: Friday, November 14, 2025, 15:32 [IST] Other articles published on Nov 14, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *