லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா? இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!! – Allmaa

லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா?  இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!! – Allmaa

  World

லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா? இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!!

World oi-Devika Manivannan By Published: Tuesday, November 25, 2025, 17:16 [IST] Share This Article

உலகளவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய நகரங்களில் ஒன்றாக லண்டன் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் லண்டனுக்கு சுற்றுலாவுக்காக வருகை தருகின்றனர்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பலரும் லண்டனில் செட்டில் ஆகி இருக்கின்றனர். இந்த சூழலில் லண்டன் மாநகரம் தங்கள் நகரத்திற்கு சுற்றுலா வருபவர்களுக்கு சுற்றுலா வரி விதிக்க திட்டமிட்டு இருக்கிறதாம் . இதன்படி லண்டனுக்கு வருகை தருபவர்கள் அங்கே இருக்கக்கூடிய ஹோட்டல் மற்றும் ஏர் பிஎன்பி உள்ளிட்டவற்றில் தங்கினால் அதற்கு அவர்கள் சுற்றுலா வரியை செலுத்தி ஆக வேண்டும்.

லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா? இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!!

லண்டன் பெருநகர ஆணையத்தின் ஆய்வுக்குழு இந்த பரிந்துரையை வழங்கி இருக்கிறது . இந்த சுற்றுலா வரியின் மூலம் லண்டன் மாநகரத்திற்கு ஆண்டுக்கு 240 மில்லியன் பவுண்டுகள் வருமானமாக கிடைக்கும் என சொல்லப்படுகிறது. சுற்றுலா வரி என்ற என்ற பரிந்துரைக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார் லண்டன் மேயர் சாதிக் கான்.

இருந்தாலும் பிரிட்டன் அரசாங்கம் அனுமதி அளித்தால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும் எனக் கூறியிருக்கிறார். ஏற்கனவே பல்வேறு சர்வதேச நகரங்களிலும் சுற்றுலா வரி என்பது வசூல் செய்யப்படுகிறது. இது அந்த நகரின் தூய்மை தன்மையை பராமரிப்பதற்கும் அந்த நகரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

Also Readசென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!!சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!!

லண்டன் உலக சுற்றுலா நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது மிகச்சிறந்த பிசினஸ் டெஸ்டினேஷனாகவும் இருக்கிறது . எனவே இந்த சுற்றுலா வரி விதிப்பது லண்டன் வளர்ச்சிக்கு உதவும் என சாதிக் கான் கூறியிருக்கிறார் . பிபிசி வெளியிட்டுள்ள தகவலின் படி லண்டனில் நீங்கள் ஒரு ஹோட்டலில் தங்குகிறீர்கள் என்றால் அந்த கட்டணத்தில் 5% தொகையை சுற்றுலா வரியாக செலுத்தியாக வேண்டும்.

சராசரியாக இது ஒரு நாள் இரவுக்கு பத்து பவுண்டுகளாக இருக்கும் என சொல்லப்படுகிறது . ஏற்கனவே நியூயார்க் நகரம் ,டோக்கியோ ,பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட சர்வதேச சுற்றுலா நகரங்கள் அனைத்துமே இதுபோல சுற்றுலா வரி என்பதை விதிக்கின்றன. நியூயார்க் நகரம் ஒரு ஆண்டுக்கு இந்த சுற்றுலா வரியின் மூலம் 493 மில்லியன் பவுண்டுகளை வருமானமாக பெறுகிறது. ஜப்பானின் டோக்கியோ நகரம் 35 மில்லியன் பவுண்டுகளை சுற்றுலா வரி நடைமுறையில் இருந்து பெறுகிறது.

Recommended For Youசவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!!சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!!

ஸ்காட்லாந்து, எடின்பர்க் ஆகிய நகரங்களும் சுற்றுலா வரியை விதிக்க தொடங்கிவிட்டன. இங்கே வரக்கூடிய மக்கள் இரவு ஹோட்டல் அல்லது ஏர் பிஎன்பிகளில் தங்குகிறார்கள் எனும் போது அந்த கட்டணத்தில் ஒரு கணிசமான சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும். இது ஒட்டுமொத்தமாக நம்முடைய சுற்றுலா பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Share This Article English summary

London plans to introduce a tourist tax on hotel stays

London plans to introduce a tourist tax on hotel and short-term rental stays. This new levy aims to generate significant revenue for the city. Story first published: Tuesday, November 25, 2025, 17:16 [IST] Other articles published on Nov 25, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *