முட்டுக்கட்டைபோட்ட அமெரிக்காவே இறங்கி வந்தது எப்படி? இந்திய வர்த்தகத்திற்கு இனி கிரீன் சிக்னல்?

befunky-collage-2026-02-11t162646-692-1770807443

  செய்திகள்

முட்டுக்கட்டைபோட்ட அமெரிக்காவே இறங்கி வந்தது எப்படி? இந்திய வர்த்தகத்திற்கு இனி கிரீன் சிக்னல்?

News oi-Pugazharasi S By Published: Wednesday, February 11, 2026, 16:27 [IST] Share This Article

வர்த்தக போர் மேகங்கள் விலகி, இந்தியா- அமெரிக்கா இடையே வசந்த காலம் தொடங்கிவிட்டது.. ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை 50% வரி, ரகசிய நிபந்தனைகள் என மிரட்டி கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது திடீரென ஒரு படி பின்வாங்கி இருக்கிறது. இந்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருந்த அந்த 3 சிக்கலான விஷயங்களை வெள்ளை மாளிகை தனது புதிய அறிக்கையில் திருத்தங்களை செய்துள்ளது.

குறிப்பாக, இந்திய விவசாயிகளை பாதிக்கும் பருப்பு வகை இறக்குமதி மற்றும் இந்தியா கண்டிப்பாக செய்தே தீர வேண்டிய 500 பில்லியன் டாலர் முதலீடு போன்ற கடுமையான வார்த்தைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல, சர்வதேச அரங்கில் இந்தியாவின் ராஜ தந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அமெரிக்கா ஏன் திடீரென தனது பிடிவாதத்தை கைவிட்டது? அந்த ரகசிய மாற்றங்கள் இந்திய பொருளாதாரத்தை எப்படி மாற்றப்போகிறது? உண்மையில் என்ன தான் நடக்கிறது, வாருங்கள் பார்க்கலாம்.

முட்டுக்கட்டைபோட்ட அமெரிக்காவே இறங்கி வந்தது எப்படி? இந்திய வர்த்தகத்திற்கு இனி கிரீன் சிக்னல்?

சில திருத்தம்!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வணிக ஒப்பந்தத்தில் வெள்ளை மாளிகை சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வெளியாகின. தற்போது அதில் சில திருத்தங்களை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இது கவனக்குறைவால் சேர்க்கப்பட்ட சில சொற்களை இரு தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த மாற்றங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் இறக்குமதி வரிகள் குறைப்பு அல்லது நீக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பட்டியலில் சில பருப்பு வகைகள் நீக்குதல் மற்றும் டிஜிட்டல் சேவை வரிகளை நீக்குதல் என சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

3 முக்கிய அம்சங்கள் என்ன?

இந்தியா – அமெரிக்கா இடையிலான வணிக ஒப்பந்தத்தில் விவசாய விளை பொருட்களான, சில பருப்பு வகைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

1. முன்னதாக இறக்குமதி வரியை குறைப்பதாக இந்தியா ஒப்புக்கொண்ட பல பண்ணை மற்றும் உணவுப் பொருட்களுடன் சில பயறு மற்றும் பருப்பு வகைகள் சேர்க்கப்பட்டிருந்தன. இதில் குறிப்பிட்ட பருப்பு வகைகள் திருத்தப்பட்ட அறிக்கையில் நீக்கப்பட்டுள்ளன.

முன்னதாக வெளியான அறிக்கையில், தானியங்கள், சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், சோயாபீன் எண்ணெய், ஒயின், மதுபானங்கள் மற்றும் சில பருப்பு வகைகள் இருந்தன. உலகின் அதிக உற்பத்தி மற்றும் நுகர்வோர் கொண்டுள்ள நாட்டில் பருப்பு வகைகள், பயறு வகைகள், குறிப்பாக கொண்டைக் கடலை போன்ற பருப்புகள் போன்றவை இந்தியர்களுக்கு மிக இணக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் அமெரிக்காவின் இந்த திருத்தமானது வந்துள்ளது.

2. அடுத்ததாக கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம், இந்தியா அதன் டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்ற கூற்றையும் வெள்ளை மாளிகை நீக்கியுள்ளது. திருத்தம் செய்யப்பட்டுள்ள இந்த வரிகள், இந்திய டிஜிட்டல் வர்த்தக விதிகளுக்குட்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

3. அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப பொருட்களை 500 பில்லியன் டாலருக்கு இந்தியா வாங்க வேண்டும் என்பதை இந்தியா உத்தேசித்துள்ளது என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது முன்னதாக இந்த கூற்றானது இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்க உறுதி அளித்துள்ளதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு சாதகமா?

முந்தைய அறிக்கையின் படி, அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்க இந்தியா உறுதி அளித்துள்ளது (Committed) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Commitment என்பது ஒரு கண்டிப்பான வாக்குறுதியை போன்றது. அதை நிறைவேற்ற தவறினால் எதிர்காலத்தில் சிக்கல்கள் வரலாம். ஆனால் திருத்தம் செய்யப்பட்ட புதிய அறிக்கையில், இந்தியா இவ்வளவு பொருட்களை வாங்க உத்தேசித்துள்ளது (Intends) என்று மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு விருப்பத்தை தெரிவிப்பதே தவிர, கட்டாயமான ஒப்பந்தம் அல்ல. இதன் மூலம் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியா தனது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் கிடைத்துள்ளது.

முந்தைய அறிக்கையில் 500 பில்லியன் டாலர் கொள்முதல் பட்டியலில் அமெரிக்காவின் எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், நிலக்கரி ஆகியவற்றுடன் விவசாயப் பொருட்களும் (Agricultural products) இடம் பெற்றிருந்தன. ஆனால் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலில் பருப்பு வகைகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அமெரிக்க விவசாய பொருட்களை கோடிக்கணக்கில் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இந்தியாவுக்கு இல்லை. இது இந்திய விவசாயிகளின் நலனையும் பாதுகாக்க உதவும்.

அமெரிக்காவின் இந்த திருத்தமானது இந்திய அரசு தனது நிபந்தனைகளில் உறுதியாக இருந்ததை காட்டுகிறது. குறிப்பாக, டிஜிட்டல் சேவை வரி (தொடர்பான பிடிவாதத்தையும் அமெரிக்கா தற்போது தளர்த்தியுள்ளது. இது இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சாதகமான செய்தியாகும்.

Share This Article English summary

Good News: White House quietly 3 changes in fact sheet on US-India deal

The White House revised the US-India factsheet, dropping pulse tariffs and the $500bn commitment for more flexible intent, boosting trade ties. Story first published: Wednesday, February 11, 2026, 16:27 [IST] See More On: tax Other articles published on Feb 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *