மணக்குடியில் சேதமடைந்த இரும்பு பாலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

மணக்குடியில் சேதமடைந்த இரும்பு பாலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கன்னியாகுமரிமாவட்டம், மணக்குடியில் சேதமடைந்த இரும்பு பாலத்தினைமாவட்டஆட்சித்தலைவர்திருமதி.ஆர்.அழகுமீனா, ..., அவர்கள் இன்று (05.11.2025) நேரில்பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டுதெரிவிக்கையில்

17

கன்னியாகுமரிமாவட்டத்தில், 79 கடலோர குடியிருப்புகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 19  ஊரக குடியிருப்புகளுக்கானகூட்டுக்குடிநீர்திட்டத்தில் கன்னியாகுமரிநகராட்சி, அஞ்சுகிராமம், அகஸ்தீஸ்வரம்ஆகியபேரூராட்சிகள், மணக்குடி, கோவளம், லீபுரம், பஞ்சலிங்கபுரம், மகாராஜபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் கொண்டுசெல்லும் 450 மி.மீ பிரதான இரும்பு குழாய் அமைக்கப்பட்டுள்ள மணக்குடி இரும்பு பாலம் சேதமடைந்த காரணத்தினால் குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

மணக்குடி இரும்பு பாலம் நேரில் ஆய்வு மேற் கொள்பட்டது. இரும்பு பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை உடனடியாக சரிசெய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் சேதமடைந்த இரும்பு பாலத்தினை விரைந்து சரிசெய்யஉரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

நடைபெற்ற ஆய்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், கன்னியாகுமரி நகராட்சி ஆணையாளர் மற்றும் வட்டாரவளர்ச்சி அலுவலர்துறை அலுவலர்கள் உட்படபலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *