தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது.
இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது.
இதில், கட்டிடத்தின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு கீழ் இருந்தால் சார்-பதிவாளர்கள், ரூ.50 லட்சம் மேல் உள்ள கட்டிடங்கள் என்றால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த ஆய்வின் போது கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்து, பத்திரம் பதிவு செய்தது சரி என்றால் உடனடியாக பத்திரத்தை திரும்ப தர வேண்டும்.
இல்லையெனில் அந்த கட்டிடத்துக்கான மதிப்பில் நிர்ணயம் செய்த கூடுதல் கட்டணம் வசூலித்து, அதன்பிறகே திருப்பி தர வேண்டும்.
ஆனால், ஆட்கள் பற்றாக்குறை, பணிப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி பதிவு அலுவலர்கள் 15 நாட்கள் முதல் 1 மாதங்களுக்கு மேலாக பல அலுவலகங்களில் ஆவணங்களை திருப்பி தராமல் உள்ளனர்.
இதற்கு, கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்வதில் உள்ள காலதாமதம் தான் காரணம் எனக்கூறப்படுகிறது.
இதனால், பல அலுவலகங்களில் ஆவண பதிவு முடிந்தும் பல நாட்களாகியும் பத்திரம் திருப்பி தரப்படுவதில்லை.
இது தொடர்பாக பதிவுத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ்., அனைத்து சார்-பதிவாளர் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்,
ஆவணம் பதிவு செய்த ஓரு வாரத்திற்குள் கட்டிட களப்பணி மேற்கொண்டு ஆவணம் திரும்ப வழங்க வேண்டும்.
ஒரு வாரத்திற்கு மேல் காலதாமதம் ஏற்படக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
விதிமீறிய கட்டிடங்கள் மீதான நடவடிக்கை பொது விதிகளை உருவாக்கியது அரசு நோட்டீஸ் அளிக்காமல் பார்வையிட அதிகாரிகளுக்கு அனுமதி
தமிழ்நாட்டில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீதான நடவடிக்கைகளுக்கு பொதுவான விதிகளை உருவாக்கி,
தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் அந்தந்த பகுதியைப் பொருத்தும், சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் பொருத்தும்,
கட்டிடங்களுக்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு விதிமீறல் கட்டிடங்கள் மீதான நடவடிக்கைகளுக்கு பொதுவான விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி துறையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த விதிகள், தமிழ்நாடு நகர மற்றும் ஊரமைப்பு (அங்கீகரிக்கப்படாத மேம்பாடு நீக்கம்) விதிகள் என்று அழைக்கப்படும்.
இதன்படி, ஒரு திட்டக் குழுமம் அல்லது அந்த குழுமத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர் ஒருவர், ஒரு நிலம் அல்லது கட்டிடத்தில் விதிமீறல்,
அதாவது அங்கீகாரமற்ற மேம்பாடு இருப்பதை கண்டறிந்தால்,
சட்டப்படி, அந்த மேம்பாட்டுக்கான ஆவணங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குமாறு நிலம் அல்லது கட்டிட உரிமையாளர் அல்லது அந்த இடத்தில் குடியிருப்பவருக்கு நோட்டீஸ் அளிக்கலாம்.
அதேபோல, விதிமீறல் நடைபெற்றிருந்தாலோ, நடைபெற்றுக் கொண்டிருந்தாலோ,
நோட்டீஸ் அளித்த 7 நாட்களுக்குள் எவ்வித தகவலும் அளிக்காமல், அந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்யலாம்.
ஆய்வு செய்த பின்னர், கட்டிடம் கட்டப்பட்டு வருகிறதா அல்லது முடிவுற்றதா, திட்ட அனுமதியை தாண்டி விதிமீறல் இருந்தால் அதன் விவரம்,
கட்டிடமுடிப்புச் சான்றிதழ் பெறப்பட்டதா, கட்டிடம் மீதான வரி கணக்கிடப்பட்டுள்ளதா,
குடிநீர், கழிவுநீர், மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளதா ஆகியவை உள்ளடக்கிய அறிக்கையைத் தயாரித்து, துறைக்கு அளிக்க வேண்டும்.
30 நாட்கள் அவகாசம்: ஒருவேளை விதிகளை மீறிஏற்கெனவே கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் நிலையில்,
முன் அனுமதிபெறாமல் அல்லது அரசால் அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ள இனங்களில், அந்த கட்டுமானத்தை இடித்து,
நிலத்தை முன்பிருந்த நிலையில் காட்டுமாறு அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கலாம்.
இதற்கு30 நாட்கள் அவகாசம் அளிக்கலாம். கட்டிட அனுமதி வழங்கப்பட்டிருக்கும்பட்சத்தில்,
அந்த நிலம்அல்லது கட்டிடத்தை பயன்படுத்துவதை நிறுத்திவைக்கும்படி நோட்டீஸ் வழங்கலாம்.
பணிகள் நடைபெற்று வரும்கட்டிடம், நிலத்தைப் பொருத்தவரை, அலுவலர் ஆய்வின்போது விதிமீறல் கண்டறிந்தால், பணியைநிறுத்தி வைக்குமாறு நோட்டீஸ் வழங்கலாம்.
அவ்வாறு நிறுத்திவைக்காமல் பணி தொடரப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர், குறிப்பிட்ட விதிமீறல் பகுதியை 7 நாட்களுக்குள் அகற்ற உத்தரவிடலாம்.