ஏஐ வளர்ச்சியால் இன்னும் 20 ஆண்டுகளில் உலகம் இப்படி மாறிவிடும் ,பணமே தேவைப்படாது:எலான் மஸ்க்
News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Sunday, November 23, 2025, 8:35 [IST] Share This Article
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக வேகமான வளர்ச்சியை அடைந்துவிட்டது . தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட வேலைகளில் ஏஐ பயன்படுத்த தொடங்கிவிட்டன.
அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் அனைத்தும் ஏஐ பிரிவில் முன்னணி நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு இந்த தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை தொடர்ச்சியாக தீவிரப்படுத்தி வருகின்றன . இந்த சூழலில் மனித வடிவிலான ஏஐ திறன் கொண்ட ரோபோக்களை உருவாக்கி வரும் எலான் மஸ்க், இன்னும் 20 ஆண்டுகளில் மனிதர்கள் வேலைக்கு செல்வது என்பது optional ஆக மாறிவிடும் என தெரிவிக்கிறார்.

வேலை செல்வது என்பது கட்டாயமாக இருக்காது தேவைப்பட்டால் வேலைக்கு செல்லலாம் என்ற ஒரு நிலை மட்டுமே இருக்கும். மனிதர்களுக்கு வேலையே இருக்காது ஏஐ அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என கூறியிருக்கிறார். தற்போது எப்படி ஒரு விளையாட்டில் ஈடுபடுவது , தோட்டத்தை பராமரிப்பது, புகைப்படம் எடுப்பது போன்றவை ஹாப்பி ஆக இருக்கிறது. 20 ஆண்டுகளில் வேலைக்கு செல்வதும் ஹாப்பி ஆகி விடும் என கூறுகிறார்.
Also Read
இனி சுந்தர் பிச்சைக்கு வேலை இல்லை!! அங்க சுத்தி இங்க சுத்தி CEO பதவிகளுக்கே ஆப்பு வைக்கும் AI..!!
மேலும் பணம் என்பது எதிர்காலத்தில் பொருத்தமற்றதாக மாறிவிடும் என அவர் கூறியிருக்கிறார். அமெரிக்கா சவுதி முதலீட்டாளர் கூட்டமைப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் தற்போது மனிதர்கள் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது 20 ஆண்டுகளுக்கு பிறகு வேலைக்கு செல்வது என்பது அவர்களுக்கு விருப்பம் இருந்தால் செல்லலாம் இல்லை என்றால் தேவையில்லை என்ற ஒரு நிலையில் இருப்பார்கள் என்கிறார்.

டெஸ்லாவில் 1 டிரில்லியன் சம்பளம் பெற போகும் எலான் மஸ்க் தான் இப்படி ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஏஐ தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இதே வேகத்தில் தொடர்கிறது எனும் போது வசதியான வாழ்க்கை வாழ பணம் சம்பாதிப்பது அவசியம் இல்லை என்ற நிலை உண்டாகும் என கூறியிருக்கிறார். அனைவரையும் பணக்காரராக்க ஒரே ஒரு வழி இருக்கிறது. அது ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் மட்டுமே என கூறி இருக்கும் ஒரு கட்டத்தில் பணம் என்பதே பொருத்தமற்றதாகிவிடும் என நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Recommended For You
AI தொழில்நுட்பத்தை மிஞ்சும் Super Intelligence..!! எந்திரன் கதை உண்மையாகுதா? மனிதகுலத்திற்கே ஆபத்தா?
எலான் மஸ்கின் நிறுவனம் ஆப்டிமஸ் என்ற மனித வடிவிலான ரோபோக்களை உருவாக்கி வருகிறது, வருங்காலத்தில் அனைவருமே இது போன்ற ரோபோக்களை தங்களுக்கு துணையாக கொண்டிருப்பார்கள் என்கிறார். கூகுள், மைக்ரோசாப்ட், எலான் மஸ்கின் எக்ஸ் ஏஐ, சாட் ஜிபிடி, பெர்பிளெக்சிட்டி, மெட்டா ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு ஏஐ ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஏற்கனவே பல வேலைகளை ஏஐ மனிதர்களிடம் இருந்து பறித்து கொண்டது. இந்நிலையில் எலான் மஸ்கின் கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.
Share This Article English summary
Due to AI Working will become optional in just 20 years says Elon musk
Working will become optional in just 20 years, due to artificial intelligence and robotics, Elon Musk predicts, he also insists that money will also become irrelevant in the future. Story first published: Sunday, November 23, 2025, 8:34 [IST]