எக்ஸைட், அமர ராஜா-வை விடுங்க! EV போரில் சைலண்டாக கல்லா கட்டும் 3 மறைமுக பங்குகள்!
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 12:57 [IST] Share This Article
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன புரட்சி என்றாலே நம் நினைவிற்கு வருவது எஸ்ஸைட் மற்றும் அமர ராஜா போன்ற பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் தான். ஆனால் உண்மையான EV போர், பேட்டரிக்கு உள்ளே இருக்கும் மூலப் பொருட்களிலும், நவீன தொழில்நுட்பத்திலும் தான் இருக்கிறது. பலரும் கவனிக்காத இந்த மறைமுக சந்தையில் சீனாவை வீழ்த்தி, உலக சந்தையை தன் பக்கம் திருப்பியுள்ள 3 இந்திய நிறுவனங்கள் பற்றித் தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

என்னென்ன நிறுவனங்கள்?
HEG: லித்தியம்-அயன் மற்றும் எரிசக்தி சேமிப்பு (BESS) தளத்தில் ஒரு ஒருங்கிணைந்த சக்தியாக உருவெடுத்து வருகிறது.
PCBL: பேட்டரிகளுக்கான சூப்பர்-ஃபுட் (Super-Food) என அழைக்கப்படும் கார்பன் பிளாக் நுணுக்கங்களை உருவாக்கி அசத்தி வருகிறது.
ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி (Himadri Speciality): சீனாவுக்கு வெளியே, உலகின் முதல் லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (LFP) ஆலையை உருவாக்கி வரலாற்றுச் சாதனை படைக்கத் தயாராகி வரும் நிறுவனமாகும்.
HEG லிமிடெட் நிறுவனம் பற்றி?
HEG Limited நிறுவனம் பாரம்பரியமாக கிராஃபைட் எலக்ட்ரோடு தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. ஆனால், தற்போது இந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகனம் (EV) மற்றும் எரிசக்தி சேமிப்பு துறையில் மிகப்பெரிய பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது.
HEG நிறுவனம் தனது துணை நிறுவனமான TGI (The Graphene Council) மூலம், லித்தியம்-அயன் பேட்டரிகளின் மிக முக்கியமான பகுதியான ஆனோட் (Anode) தயாரிப்பில் இறங்கியுள்ளது. பேட்டரி தயாரிப்பில் கிராஃபைட் ஒரு முக்கிய மூலப்பொருள் என்பதால், ஏற்கனவே இதில் அனுபவம் வாய்ந்த HEG-க்கு இது ஒரு மிகப்பெரிய சாதகமாகும்.
BESS (Battery Energy Storage Systems) என்பது சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தை பெரிய அளவிலான பேட்டரிகளில் சேமித்து வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்துவதாகும். இதன் தேவையும் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் பேட்டரி உற்பத்திக்கு பயனுள்ளதாக இருக்கலாம். இது வெறும் பேட்டரி பாகங்களை மட்டும் தயாரிக்காமல், ஒட்டுமொத்த சேமிப்பு தளத்தையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அரசின் திட்டங்கள், இலக்குகள் மூலம் பயனடையும் இந்த நிறுவனம், சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. இது மேற்கொண்டு அதன் நீண்ட கால வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். HEG நிறுவனத்தை வெறும் கிராஃபைட் நிறுவனமாகவே பலரும் பார்க்கிறார்கள். ஆனால் இவர்களின் லித்தியம்-அயன் பேட்டரி ஆலை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, இது ஒரு EV Tech நிறுவனமாக அங்கீகரிக்கப்படும். அப்போது அதன் பங்கு மதிப்பு பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் இப்பங்கானது 529.60 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது.
பிசிபிஎல் கெமிக்கல் (PCBL Chemical)
பிசிபிஎல் கெமிக்கல் நிறுவனமானது ஆர் பி சஞ்சீவ் கோயங்கா குழுமத்தைச் சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனமாகும். இது இந்தியாவின் மிகப்பெரிய கார்பன் பிளாக் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த கார்பன் பிளாக் ஆனது லித்தியம்-அயன் பேட்டரிகளின் செயல்திறனை அதிகரிக்க ஒரு மிக முக்கியமான மூலப்பொருளாகும். இது பேட்டரிக்குள் இருக்கும் மின்சாரத்தை வேகமாக கடத்தவும், பேட்டரி சூடாவதைக் குறைக்கவும் இது உதவுகிறது. பேட்டரியின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுவதால், இது பேட்டரிகளுக்கான சூப்பர்-ஃபுட் என்றும் வர்ணிக்கப்படுகிறது.
பிசிபிஎல் நிறுவனம் கார்பன் பிளாக்கை தாண்டி, அதிக லாபம் தரக்கூடிய ஸ்பெஷாலிட்டி கார்பன் தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது பிளாஸ்டிக், பெயிண்ட், மை மற்றும் குறிப்பாக எலக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.
அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் வரும் ஆண்டுகளில் சிறப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சமீபத்திய நிதி நிலவரங்கள் வலுவாக காணப்படுவது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனிடையே இந்த கெமிக்கல் பங்கானது 311.65 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது.
ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் (himadri chemicals)
ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி நிறுவனமானது சீனாவுக்கு வெளியே, உலகின் முதல் LFP (Lithium Iron Phosphate) ஆலைகளில் ஒன்றை இந்தியாவில் அமைக்க போவதாக தெரிவித்துள்ளது. பேட்டரி தயாரிப்பில் சீனாவிடம் இருக்கும் பிடியை தளர்த்த இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கலாம்.
அதோடு பேட்டரியின் விலை மற்றும் செயல்திறனை தீர்மானிக்கும் மிக முக்கியமான பகுதி கேத்தோடு. ஹிமாத்ரி நிறுவனம் இதற்கு 4,800 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த 5-6 ஆண்டுகளில் பிரம்மாண்டமான ஆலையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே கிராஃபைட் சார்ந்த ஆனோட் மூலப்பொருட்கள் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்தவர்கள். இப்போது கேத்தோடு துறையிலும் இறங்குவது, அவர்களை ஒரு முழுமையான பேட்டரி மெட்டீரியல் நிறுவனமாக மாற்றுகிறது. இப்பங்கானது தற்போதைய சூழலில் 475.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
நிதி ரீதியாக பார்க்கும்போது சமீபத்திய காலாண்டுகளில் சற்று அழுத்தம் கண்டிருந்தாலும், இதன் 2025ம் நிதியாண்டின் செயல்பாட்டு மார்ஜின் 49 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 16% ஆக அதிகரித்துள்ளது. லாபமும் அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் அழுத்தம் நீங்கி, தேவை அதிகரிப்பால் வளர்ச்சி மேம்படும் என்று எதிர்பார்க்கிறது. ஆக சரியான ஆலோசனையுடன் மேற்கண்ட பங்குகள் வாங்குவது பற்றி யோசிக்கலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Beyond Exide and Amara Raja: Which 3 Hidden Stocks are Winning the Real EV War?
Forget big battery brands. The real EV wealth is in the raw materials. Meet HEG, PCBL and Himadri Speciality. three Indian companies dominating the global supply chain. Story first published: Monday, December 22, 2025, 12:57 [IST] Other articles published on Dec 22, 2025
