இந்த வாரம் பங்குச்சந்தை எப்படியிருக்கும்..? முதலீட்டாளர்களை பயமுறுத்தும் 10 விஷயங்கள்..!!

stockmarket-1767533646

  Market update

இந்த வாரம் பங்குச்சந்தை எப்படியிருக்கும்..? முதலீட்டாளர்களை பயமுறுத்தும் 10 விஷயங்கள்..!!

Market Update oi-Prasanna Venkatesh By Updated: Sunday, January 4, 2026, 19:05 [IST] Share This Article

2026ஆம் ஆண்டின் முதல் மாதத்திலேயே உலக நாடுகளில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது, அமெரிக்கா – வெனிசுலா தாக்குதல், சீனா – தைவான் ராணுவ ஒத்திகை, வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை, உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான அமைதி பேச்சுவார்த்தை என அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடித்திருக்கும் காரணத்தால் முதலீட்டு சந்தை எப்படியிருக்கும் என்பது மிகவும் முக்கியமான கேள்வியாகவே உள்ளது.

நிஃப்டி குறியீடு கடந்த வார இறுதியில் 1 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டு முடிந்தது. வெள்ளிக்கிழமை உலோகம் மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகள் அதிகமாக வாங்கப்பட்டதால் நிலையான வளர்ச்சியை பதிவு செய்தது. நிஃப்டி குறியீடு 182 புள்ளிகள் உயர்ந்து 26,328.55 இல் முடிந்தது. இந்த நிலையில் இந்த வாரம் முதலீட்டை சந்தையை பாதிக்கும் 10 விஷயங்களை இப்போது பார்ப்போம்.

இந்த வாரம் பங்குச்சந்தை எப்படியிருக்கும்..? முதலீட்டாளர்களை பயமுறுத்தும் 10 விஷயங்கள்..!!

அரசியல் பதற்றம்
சனிக்கிழமை வெனிசூலாவில் அமெரிக்க ராணுவ தாக்குதல் நடந்தது. இது உலக பங்குச் சந்தைகளில் கட்டாயம் பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்ப்படுகிறது. வெனிசூலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடு என்பதால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிக்கப்பட்டு விலை மாற்றம் வரலாம் என்ற கவலை உள்ளது. நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு நிலையான எரிபொருள் விலை அவசியம்.

அமெரிக்க சந்தை போக்கு
இந்த பங்குச்சந்தைகள் எப்போதும் அமெரிக்க வால் ஸ்ட்ரீட் அசைவுகளுக்கு ஏற்ப தான் இயங்கும். வெள்ளியன்று டவ் ஜோன்ஸ் 319 புள்ளிகள் உயர்ந்து 48,382.40 இல் முடிந்தது. எஸ் அண்ட் பி 500 0.19 சதவீதம் உயர்ந்து 6,858.47 ஆனது. நாஸ்டாக் சற்று குறைந்து 23,235.60 இல் முடிந்தது. ஆனால் திங்கட்கிழமை வெனிசுலா தாக்குதலின் தாக்கத்தை ஆசிய சந்தை எப்படிய கையாளுகிறது என்பதை அடிப்படையில் தான் சர்வதேச சந்தையின் ரியாக்ஷனாக இருக்கும்.

FII/DII முதலீடுகள்
வெள்ளிக்கிழமை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) ரூ.290 கோடி இந்திய பங்குகளை வாங்கினர். ஆனால் ஜனவரி முதல் இரு நாளில் ரூ.7,608 கோடி விற்பனை செய்தனர். 2025ல் மொத்தமாக கணக்கிட்டால் FIIகள் ரூ.1,66,286 கோடி விற்பனை செய்தனர்.

தற்போது நிலவும் அதிகப்படியான புவிசார் அரசியல் பிரச்சனைகளை பார்க்கும் போது 2026ல் இந்திய சந்தை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமான முதலீடாக சந்தையாக இருக்க போகிறது. இதனால் 2026ல் FII முதலீட்டு ஓட்டம் மீண்டும் இந்திய சந்தை பக்கம் திரும்பும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மூன்றாம் காலாண்டு முடிவுகள்
டிசம்பர் காலாண்டு முடிவுகள் ஜனவரி 12 முதல் TCS, HCL டெக்னாலஜிஸ் அறிவிப்புடன் தொடங்கும். டிமார்ட் இயக்கும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் ஜனவரி 10 அன்று முடிவுகளை வெளியிடும். இதன் மூலம் காலாண்டு முடிவுகளை வெளியிடும் சீசன் துவங்க உள்ளது.

IPO கவனம்
ஜனவரி மாதம் பாரத் கோகிங் கோல் லிமிடெட் (BCCL) நிறுவனத்தின் மெயின்போர்ட் IPO ஜனவரி 8 முதல் 13 வரை திறக்கப்பட்டு இருக்கும். இதேபோல் கோல் இந்தியா 46.57 கோடி பங்குகளை விற்கும் மெகா ஐபிஓ வெளியிட உள்ளது. இதன் விலை பேண்ட் ஜனவரி 5 அன்று அறிவிக்கப்படும்.

ரூபாய் vs டாலர்
வெள்ளியன்று ரூபாய் 90 ஐ தாண்டி 22 பைசா குறைந்து 90.20 ஆனது. வெளிநாட்டில் டாலர் வலுவடைந்தது இதற்கு காரணம்.

தங்கம், வெள்ளி போக்கு
2025 இல் தங்கம் 70 சதவீதம் உயர்ந்து 4500 டாலரை தாண்டியது, வெள்ளி 128 சதவீதம் உயர்ந்து 80 டாலரை தாண்டியது. 2026 இலும் உயர்வு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெனிசூலா தாக்குதல் தங்கம் மற்றும் வெள்ளி மீண்டும் முக்கிய பாதுகாப்பு முதலீடாக மாற்றலாம்.

ஆங்கர் லாக்-இன் காலம் முடிவு
சமீபத்தில் ஐபிஓ வெளியிட்ட பல பங்குகளில் IPO லாக்-இன் முடிவடைவதால் அதிகளவிலான பங்குகள் வர்த்தக சந்தைக்கு வர உள்ளது. ஜனவரி 5 அன்று ஓம் ஃப்ரைட் ஃபார்வர்டர்ஸ், அட்வான்ஸ் அக்ரோலைஃப் லாக்-இன் முடிய உள்ளது.

ஜனவரி 6 இல் வீவொர்க் இந்தியா, ஜனவரி 7 இல் டாடா கேபிடல், ஜனவரி 8 இல் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா லாக்-இன் முடியும்.

இந்த வாரம் பல நிகழ்வுகள் சந்தையை பாதிக்கலாம். முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Stock Market Weekly Outlook: How Investors wil react after US attacks Venezuela

Stock Market Weekly Outlook: How Investors wil react after US attacks Venezuela Story first published: Sunday, January 4, 2026, 19:04 [IST]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *