அமெரிக்கர்களுக்கு அள்ளி கொடுக்கும் டொனால்டு டிரம்ப்..! இது லிஸ்ட்லயே இல்லையே..!
World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 9:12 [IST] Share This Article
அமெரிக்கா அதிபராக பதவி ஏற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்து வருகிறார் . இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முன்பு இருந்தது விட அதிகமான இறக்குமதி வரி வசூல் செய்யப்படுகிறது .
இந்தியாவைப் பொறுத்தவரை முதலில் 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார். பின்னர் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக கூடுதலாக 25% என தற்போது இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது . டிரம்ப் இதே பாணியை பின்பற்றி பல நாடுகளின் பொருட்களுக்கு வரியை அதிகரித்தார். இறக்குமதி வரியை அதிகரித்தால் வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி குறைந்து உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும், இந்த வரி விதிப்புக்கு அஞ்சி பல நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்பதே டிரம்பின் திட்டம்.

இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் ஜவுளி, தோல் பொருட்கள் என பல்வேறு உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் டிரம்ப் பல மாதங்களாகவே இந்த இறக்குமதி வரி அதிகரிப்பின் மூலம் அரசுக்கு கிடைத்திருக்கக்கூடிய வருவாயை அமெரிக்கர்களுக்கு பகிர்ந்து அளிக்க போகிறேன் என தொடர்ச்சியாக கூறிவந்தார். தற்போது அதனை அறிக்கையாக வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அவர் இறக்குமதி வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள் என தெரிவித்திருக்கிறார். அமெரிக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 2000 அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 1,77,279 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
Also Read
உங்க உடம்புல இந்த நோய்கள் இருந்தா அமெரிக்க விசா கிடைக்காது- டிரம்ப் நிர்வாகம் புதிய அறிவிப்பு
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இறக்குமதி வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள் , நாம் தற்போது உலகிலேயே பணக்கார நாடாக இருக்கிறோம், மதிப்புக்குரிய நாடாக இருக்கிறோம். அதிலும் கிட்டத்தட்ட பணவீக்கமே இல்லாமல் பெருமளவில் பங்குச்சந்தை மதிப்பீடு கொண்ட நாடாக செயல்படுகிறோம். நம் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 2000 டாலர் வழங்கப்படும் இது அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறுபவர்களுக்கு கிடைக்காது என தெரிவித்திருக்கிறார் .
மேலும் டிரம்ப் இறக்குமதி வரி உயர்வால் நமக்கு வருமானம் பெருகியுள்ளது, இதனை கொண்டு நம்முடைய கடன்களை அடைப்போன் என்றும் , அமெரிக்காவில் பெருமளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன, எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன என கூறியிருக்கிறார்.
Recommended For You
பெரிய வீழ்ச்சி தொடங்கிவிட்டது: தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமே பிழைப்பார்கள்!!
இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது இந்த 2000 டாலர்கள் எப்படி அமெரிக்கர்களுக்கு வரவு வைக்கப்படும் என்பது குறித்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் 2000 டாலர்கள் என்பது வரி குறைப்பு உள்ளிட்ட வடிவங்களில் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.
Share This Article English summary
Trump says Americans will receive “at least” $2,000 from the tariff revenue
US President Trump announced on Sunday that most Americans will receive “at least” $2,000 from the tariff revenue collected by the administration. Story first published: Monday, November 10, 2025, 9:12 [IST] Other articles published on Nov 10, 2025