Weekendஇல் வேலையை காட்டிய தங்கம்!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இனி இப்படிதானா?

Weekendஇல் வேலையை காட்டிய தங்கம்!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இனி இப்படிதானா?

  செய்திகள்

Weekendஇல் வேலையை காட்டிய தங்கம்!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இனி இப்படிதானா?

News oi-Devika Manivannan By Updated: Saturday, November 22, 2025, 10:02 [IST] Share This Article

சென்னையில் ஆபரண தங்கம் விலை ஏறுவது இறங்குவது என ஆட்டம் காட்டி வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான இந்த ஆறு நாட்களில் நான்கு நாட்கள் விலை குறைந்து , இரண்டு நாட்கள் விலை உயர்ந்திருக்கிறது.

சென்னையில் திங்கட்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 11,540 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை அன்று தடாலடியாக 140 ரூபாய் விலை குறைந்து 11400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .ஆனால் புதன்கிழமை அன்று திடீரென தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்தது. வியாழக்கிமை அன்று 100 ரூபாயும், வெள்ளி அன்று 40 ரூபாயும் விலை சரிந்தது.

Weekendஇல் வேலையை காட்டிய தங்கம்!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இனி இப்படிதானா?

தங்கம் விலை குறைவு இப்படியே நீடிக்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் வார இறுதி நாளான இன்று கடாலடியாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் சென்னையில் நேற்று 11,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 170 ரூபாய் விலை உயர்ந்து 11,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் தங்கம் நேற்று 91,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்று ஒரே நாளில் 1360 ரூபாய் விலை உயர்ந்து 93,040 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை ஒரு சவரன் மீண்டும் 93 ஆயிரம் ரூபாயை கடந்திருக்கிறது. சென்னையில் கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடும்போது ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 90 ரூபாய் என உயர்ந்திருக்கிறது ஒரு சவரனுக்கு 720 ரூபாய் என அதிகரித்து இருக்கிறது.

மதுரை, திருச்சி,கோவையில் இன்று தங்கம் விலை என்ன?

24 கேரட் தங்கம் நேற்றைய விட இன்று ஒரு கிராமுக்கு 186 ரூபாய் விலை உயர்ந்து 12, 688 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 1488 ரூபாய் விலை உயர்ந்து 1,01,504 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது . 18 கேரட் தங்கம் இன்று கிராமுக்கு 170 ரூபாய் விலை உயர்ந்து 9700 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 1120 ரூபாய் விலை உயர்ந்து 77,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Also Readபொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!!பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!!

தங்கத்தை தொடர்ந்து இன்றைய தினம் வெள்ளியின் விலையும் உயர்வு கண்டிருக்கிறது .கிராமுக்கு மூன்று ரூபாய் வெள்ளி விலை உயர்ந்திருக்கிறது .சென்னையில் நேற்று 169 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்றைய தினம் மூன்று ரூபாய் விலை வந்து 172 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இந்த ஐந்து நாட்களில் வெள்ளியின் விலை நான்கு நாட்கள் குறைந்து, இரண்டு நாட்கள் உயர்ந்திருக்கிறது . வெள்ளி விலை கிராமுக்கு 169 ரூபாயிலிருந்து 175 ரூபாய்க்குள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

தங்கம், வெள்ளியின் விலை அக்டோபரில் உச்சத்தை எட்டின. அதன் பின்னர் விலை ஏறுவது இறங்குவது என தொடர்ச்சியாக போக்கு காட்டி வருகிறது. டிசம்பர் மாதம் வரை தங்கம், வெள்ளி விலைகள் இப்படி ஏற்ற இறக்கத்துடனே இருந்து ஜனவரி முதல் உயரும், என சொல்லப்படுகிறது.

Share This Article English summary

Gold rate inChennai has increased more than Rs 1000 per soverign,

Gold rate in Chennai has increased more than Rs 1000 per sovereign, experts says that gold rate will be volatile till this year end. Story first published: Saturday, November 22, 2025, 10:01 [IST]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *