தக்காளி சட்னி, தக்காளி சாதத்துக்கு குட்பை..!! ஒரே மாதத்தில் தடாலடியாக உயர்ந்த தக்காளி விலை..! – Allmaa
செய்திகள் தக்காளி சட்னி, தக்காளி சாதத்துக்கு குட்பை..!! ஒரே மாதத்தில் தடாலடியாக உயர்ந்த தக்காளி விலை..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 9:25 [IST] Share This Article இந்தியர்கள் தங்கள் உணவில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பொருட்களாக வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவை இருக்கின்றன. இந்த இரண்டின் விலை உயர்வு சாமானிய மக்களின் அன்றாட பட்ஜெட்டிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.திடீரென கடந்த ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் தக்காளி விலை கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது . அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக 15 நாட்களிலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 50% வரை தக்காளியின் விலை உயர்ந்திருக்கிறது. அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஒரு மாதத்திலேயே 25 லிருந்து 100% வரை தக்காளி விலை உயர்ந்துள்ளது.இந்தியாவிலேயே அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்ய கூடிய மகாராஷ்ட்ராவிலேயே 45%…