செய்திகள் இண்டிகோ விமானம் ரத்து: விமானநிலையத்தில் சிக்கி கொண்ட மணமக்கள்!! அப்புறம் நடந்தது தான் டிவிஸ்டு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, December 5, 2025, 17:07 [IST] Share This Article நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட அனைத்து பிரதான விமான நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.அண்மையில் மத்திய விமான போக்குவரத்து ஆணையரகம் விமானிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு நேரத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது . இதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்தான் இண்டிகோ நிறுவனம் தன்னுடைய நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளி இருக்கிறது.இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நூற்று கணக்கிலான விமானங்கள் தாமதம் ஆகியிருக்கின்றன . மருத்துவ…