ஸ்டாலின் கைக்கு போன ரிப்போர்ட்.. சுடச்சுட கிடைத்த சர்வே.. அப்போ தவெக விஜய்? களமே அடியோடு மாறுது? Chennai oi-Staff By Shyamsundar I Updated: Sunday, December 7, 2025, 13:39 [IST] Share This Article சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் மூத்த அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த அவசரக் கலந்துரையாடலுக்குக் காரணம், தி.மு.க.வின் think tank எனப்படு சர்வே குழு ஒன்று நடத்திய ஒரு புதிய உட்கட்சி ஆய்வுதான். இந்த ஆய்வு ஆளுங்கட்சிக்கு சாதகமான அதே சமயம் கவலைக்குரிய சில முடிவுகளை கலவையாகத் தந்துள்ளது.இந்த ஆய்வறிக்கையின்படி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மீண்டும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டு உள்ளதாம். அதாவது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும். கண்டிப்பாக மெஜாரிட்டி தனியாக கிடைக்கும் என்று சர்வேயில்…