தாறுமாறாக உயரும் முட்டை விலை!! ஆம்லேட்டுக்கு ஆப்பா? முட்டை விலையை நிர்ணயம் செய்வது யார்?
செய்திகள் தாறுமாறாக உயரும் முட்டை விலை!! ஆம்லேட்டுக்கு ஆப்பா? முட்டை விலையை நிர்ணயம் செய்வது யார்? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 27, 2025, 14:01 [IST] Share This Article சென்னையில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென இப்படி முட்டை விலை உயர்ந்திருப்பது சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.புரதச்சத்துக்கு உணவில் தினமும் முட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு அண்மைக்காலமாக மக்களிடையே அதிகரித்திருக்கிறது. இதனால் மக்கள் முட்டை உண்ணும் பழக்கமும் உயர்ந்துள்ளது. ஆனால் திடீரென முட்டையின் விலை இப்படி உயர்ந்திருப்பது மிடில் கிளாஸ் மக்களுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இதுவரை இல்லாத உச்சமாக ரூ.6.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் இந்தியாவின் முட்டை தலைநகரம், எனவே இங்கே நிர்ணயம் செய்யப்படும் விலை மாநிலம்…