செய்திகள் ரயில் டிக்கெட் முன்பதிவில் மேஜர் மாற்றம்!! டிச.29 முதல் படிப்படியாக அமல் என அறிவிப்பு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 9:22 [IST] Share This Article பொதுமக்கள் எளிமையாகவும் சௌகரியமாகவும் ரயில்களில் பயணம் செய்ய வேண்டும் , ரயில் டிக்கெட் அவர்களுக்கு எளிமையாக கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ரயில்வே அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளத்தில் கணக்கு வைத்து டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு தங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து அங்கீகார சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும் என அண்மையில் அறிவித்தது. இவ்வாறு ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் சரிப்பார்ப்பை முடித்தவர்களுக்கு தட்கல் மற்றும் பொது டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை வழங்கப்பட்டது.தற்போது ரயில் டிக்கெட்டுகளை பயணத்தின் 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம். இதனை Advance reservation…