indigo-1765003829

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட திட்டங்களை நாசமாக்கிய இண்டிகோ விமானம்? பயணிகள் கடும் அதிருப்தி..!!

  செய்திகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட திட்டங்களை நாசமாக்கிய இண்டிகோ விமானம்? பயணிகள் கடும் அதிருப்தி..!! News oi-Vignesh Rathinasamy By Vignesh Rathinasamy Published: Saturday, December 6, 2025, 12:21 [IST] Share This Article இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால், நாடு முழுவதும் விமானங்களின் இயக்கம் குழப்பத்தில் உள்ளது. இந்தக் குழப்பம் இப்போது 5-வது நாளாக தொடரும் நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுவும் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பயணச் சீட்டுகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டன.இண்டிகோ நிறுவனம், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அடுத்த சில நாட்களிலும் விமானச் சேவைகளை ரத்து செய்ய நேரிடலாம் என்று அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் இருந்து செல்லும் அனைத்து உள்நாட்டு விமானச் சேவைகளையும் இண்டிகோ ரத்து செய்தது.…

Read More