இடியாப்ப சிக்கலில் இந்திய வங்கிகள்!! கடைசியில நம்ம கடன்ல தான் கை வைக்க போறாங்க!! – Allmaa
செய்திகள் இடியாப்ப சிக்கலில் இந்திய வங்கிகள்!! கடைசியில நம்ம கடன்ல தான் கை வைக்க போறாங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 6, 2026, 8:43 [IST] Share This Article இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தான் மக்களின் மிக முக்கியமான கடன் ஆதாரமாக செயல்படுகின்றன. ஆர்பிஐ-ஆல் ஒழுங்குபடுத்தப்பட்டு இருப்பதால் நம்பிக்கையோடு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வீட்டுக் கடன், வாகன கடன் ,தொழில் புரிவதற்கான கடன் , தனிநபர் கடன் உள்ளிட்டவற்றை நாம் வாங்குகிறோம்.வங்கிகள் ஒருபுறம் மக்களிடம் இருந்து டெபாசிட்டாக பணத்தை பெறுகிறது, அந்த பணத்தை பயன்படுத்தி தான் மற்றவர்களுக்கு கடன் வழங்குகிறது. இது ரொடேஷன் முறையில் செயல்படுகிறது. தற்போது இதில் தான் பெரிய சிக்கலே உண்டாகி இருக்கிறது. இந்தியாவில் தற்போது மக்கள் கடன் வாங்கும் விகிதம் அதிகரித்து டெபாசிட் செய்யும் விகிதம் குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகி…
