Breaking: நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் இளைஞர்களே இனி சொந்த ஊரிலேயே ஐடி வேலை!!
செய்திகள் நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் இளைஞர்களே இனி சொந்த ஊரிலேயே ஐடி வேலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 31, 2025, 15:25 [IST] Share This Article தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் பெரிய வளர்ச்சியை பெற வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் பூங்காக்கள் டைடல் பார்க்குகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறது.தமிழ்நாடு அரசு வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. இதற்காக தான் மாவட்டங்களுக்கு என பிரத்தியேக முதலீட்டாளர் மாநாடு நடத்துகிறது. பல்வேறு உற்பத்தி ஆலைகளும் மாவட்டம் தோறும் நிறுவப்படுகின்றன. இது தவிர அந்தந்த மாவட்டங்களிலேயே ஐடி வேலை கிடைக்கும் வகையிலும் மினி டைடல் பார்க்குகளை கட்டி வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் புதிதாக டைடல் பார்க்குகள்…
