உங்க ஊர்ல தான் இது ஐபோன் பாக்கெட்.. எங்க ஊர்ல இதுக்கு பேர் ஜோல்னா பை!! கிண்டலுக்கு ஆளாகும் ஆப்பிள்!! – Allmaa

  செய்திகள் உங்க ஊர்ல தான் இது ஐபோன் பாக்கெட்.. எங்க ஊர்ல இதுக்கு பேர் ஜோல்னா பை!! கிண்டலுக்கு ஆளாகும் ஆப்பிள்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 14:40 [IST] Share This Article ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் தயாரிப்புகள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றதாக இருக்கிறது . ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யக்கூடிய எந்த ஒரு தயாரிப்புகளாக இருந்தாலும் அந்த பிராண்டின் பெயருக்காகவே அதனை வாங்கக்கூடிய நபர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் .இந்த சூழலில் தான் ஆப்பிள் நிறுவனம் ஜப்பானை ஒரு பேஷன் நிறுவனமான இசே மியாகியுடன் இணைந்து ஐபோன் பாக்கெட் என்ற ஒரு புதிய தயாரிப்பை சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் ஐபாட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒரு பை. இது இந்தியாவில் நாம் பயன்படுத்தும் ஜோல்னா பைகளின் மினி வெர்சன் என…