நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கே டெர்மினேஷன் லெட்டர் அனுப்பிய ஹெச்.ஆர்..!
செய்திகள் நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கே டெர்மினேஷன் லெட்டர் அனுப்பிய ஹெச்.ஆர்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 11:11 [IST] Share This Article உலக அளவில் பல நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. ஐடி துறை மந்தமாக இருப்பது , ஏஐ செயலிகளின் பயன்பாடு அதிகரித்தது உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு முன் வைக்கப்படுகின்றன.டிசிஎஸ் ,அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன. உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்துக்கு அதிகமான ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இது அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை தான், உண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.இந்த சூழலில் ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் தங்கள் நிறுவனத்தின் மனித வள துறை…
