us9-1763549816

திடீரென மனம் மாறிய டிரம்ப்..!! 50% வரியில் இருந்து குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு!! – Allmaa

  செய்திகள் திடீரென மனம் மாறிய டிரம்ப்..!! 50% வரியில் இருந்து குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 16:28 [IST] Share This Article அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 50% வரி விதிக்கிறது. முதலில் டிரம்ப் இந்திய பொருள்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் இறக்குமதி வரி என்பது இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது .அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவை சேர்ந்த ஜவுளி ,நகை, தோல் பொருட்கள், கடல் சார்ந்த உணவுகள் சார்ந்த ஏற்றுமதி துறை சம்பந்தப்பட்ட லட்சக்கணக்கான தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. டிரம்ப் நிர்வாகம் இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கும் இப்படி போட்டி…

Read More
chinagold2-1763548082

பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!!

  செய்திகள் பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 16:00 [IST] Share This Article சீனா: உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கியது தான். 2025 ஆம் ஆண்டு இந்த போக்கை தொடங்கி வைத்தது சீனா.சீன நாட்டின் மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டில் பல மடங்கு தங்கத்தை வாங்கி இருப்பு வைத்திருக்கிறது . சீனா அரசாங்கமும் நாட்டு மக்கள் இயன்றளவு தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என தொடர்ச்சியாக அறிவுரை கூறி வருகிறது . சீன நாட்டு அரசாங்கம் வெளியிடும் தகவலின் படி 2024 ஆம் ஆண்டில் சீன நாட்டு மத்திய வங்கி 44 டன்கள் தங்கம் வாங்கி…

Read More
vembu3-1763543827

இளைஞர்களே 20களிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளுங்கள்: ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை

  செய்திகள் இளைஞர்களே 20களிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளுங்கள்: ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 14:51 [IST] Share This Article தற்போது உள்ள பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் வேலைக்கு சென்று விட்டு சொந்தமாக வீடு வாங்குவது, நிதி ரீதியாக செட்டிலாவது என கடமைகளை முடித்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது.ஆண்கள் , பெண்கள் என இருவருமே வேலையில் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட வேண்டும் அல்லது சொந்தமாக ஒரு சுயதொழில் தொடங்கி அதில் செட்டிலான பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற தள்ளிபோடுகின்றனர். இந்த சூழலில் தான் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இளைஞர்கள் தங்களுடைய 20களிலேயே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி…

Read More
goldf55-1763527144

சென்னையில் 2 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று என்ன ஆனது? ஒரு சவரன் விலை என்ன? – Allmaa

  செய்திகள் சென்னையில் 2 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று என்ன ஆனது? ஒரு சவரன் விலை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 10:11 [IST] Share This Article சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. 2 நாட்கள் ஏறுவது, 2நாட்கள் விலை இறங்குவது என மக்களுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. தங்கம் விலை குறைகிறதே வாங்கி விடலாம் என மக்கள் எண்ணும் போது திடீரென விலை உயர்ந்து விடுகிறது.சென்னையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதிகபட்சமாக நவம்பர் 13ஆம் தேதி அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 11,900 ரூபாய் என்ற இந்த மாதத்திற்கான உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் தங்கம் 95 ,200 ரூபாய் என ஆனது. இதனை அடுத்து தங்கத்தின் விலை மீண்டும்…

Read More
cbef4-1763523866

தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து கோவைக்கு அடித்த ஜாக்பாட்!! நவம்பர் 25இல் முதலீட்டாளர் மாநாடு!! – Allmaa

  செய்திகள் தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து கோவைக்கு அடித்த ஜாக்பாட்!! நவம்பர் 25இல் முதலீட்டாளர் மாநாடு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 9:29 [IST] Share This Article தமிழ்நாட்டின் வளர்ச்சி சென்னை போன்ற குறிப்பிட்ட மாவட்டங்களிலேயே நின்றுவிட கூடாது, அனைத்து மாவட்டங்களிலும் பொருளாதார வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்துகிறது.வளர்ச்சி பரவல் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் முதலீட்டாளர் மாநாடு நடத்தி முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் வெற்றிகரமாக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு பல்லாயிரம் கோடி கணக்கிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கக்கூடிய கோயம்புத்தூரில் வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு அரசு TN Rising conclave எனப்படும் தன்னுடைய மூன்றாவது மாவட்ட…

Read More
gold-2025-11-18t163037-905-1763463645

இந்தியாவில் 3 மடங்கு உயர்ந்த தங்கம் இறக்குமதி!! இப்படியே போனா பெரிய சிக்கல் என எச்சரிக்கை!! – Allmaa

  செய்திகள் இந்தியாவில் 3 மடங்கு உயர்ந்த தங்கம் இறக்குமதி!! இப்படியே போனா பெரிய சிக்கல் என எச்சரிக்கை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 16:34 [IST] Share This Article உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தங்கத்தை நகையாக வாங்கி பயன்படுத்தும் போக்கு மக்களிடையே காலம் காலமாக இருந்து வருகிறது.சாமானிய மக்களில் தொடங்கி பெரும் பணக்காரர்கள் வரை தங்கத்தை தங்களுடைய அந்தஸ்தாக பார்க்கிறார்கள். கையில் ஒரு சிறிய தொகை வந்தாலே தங்கத்தை நகையாக வாங்கி வைத்துவிடும் பழக்கம் இந்திய மக்களிடையே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இதன் காரணமாகவே இந்தியாவில் தங்கம் விற்பனை என்பது அதிகமாகவே இருக்கும்.ஆனால் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி திடீரென அதிகரித்து இருப்பதாகவும் அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் பிரபல…

Read More
managerf1-1763461190

Breaking: வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி!

  செய்திகள் வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 18, 2025, 15:50 [IST] Share This Article இந்தியாவில் தற்போது பெரும்பாலான இளம் தம்பதிகளில் இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள் . ஐடி துறையில் வேலை, சொந்தமாக தொழில் செய்வது என பிஸியாக இருக்கிறார்கள். இவ்வாறு வேலையிலும் சுயதொழிலிலும் கவனம் செலுத்துபவர்களுக்கு வீட்டை நிர்வகிக்க நேரம் கிடைப்பதில்லை.வழக்கமாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் வீடுகளில் சமையல் வேலைக்கு ஒரு நபர் ,வீட்டை சுத்தம் செய்வதற்கு ஒரு நபர், குழந்தைகளை பராமரிப்பதற்கு ஒரு நபர் என தனித்தனியாக ஆட்களை வைத்துக்கொண்டு பார்த்துக்கொள்வார்கள். அதனை தாண்டி வீட்டை நிர்வகிப்பது என்பதும் பெரிய வேலை தான்.கரண்ட் பில் கட்டுவது, சிலிண்டர் புக் செய்வது, வீட்டை…

Read More
telangana2-1763449487

Breaking: தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

  செய்திகள் தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Tuesday, November 18, 2025, 12:35 [IST] Share This Article இந்திய சப்ளை செயினில் முக்கிய அங்கமாக மாறி வரும் கிக் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், தெலுங்கானா மாநில அரசு நேற்று முக்கியமான மசோதாவை கிக் ஊழியர்கள் நலனுக்காகத் தாக்கல் செய்துள்ளது. இது அம்மாநிலத்தில் இருக்கும் 4 லட்சத்திற்கும் அதிகமான கிக் ஊழியர்களும் பெரிய அளவில் வரவேற்றுள்ளனர்.இந்தியாவில் முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலத்தின் தான் கிக் ஊழியர்களுக்கான சட்டத்தை இயற்றி நடைமுறை செய்துள்ளது. இதன் பின்பு கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா ஆகியவை மசோதாவை தாக்கல் செய்து இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.இந்த நிலையில் இத்தகைய மசோதா மூலம் கிக்…

Read More
mumbaif-1763443586

Breaking: மும்பையில் CNG விநியோகம் பாதிப்பு: லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

  செய்திகள் ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்தது.. லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி.. News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 18, 2025, 11:06 [IST] Share This Article மும்பையிக் சிஎன்ஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிஎன்ஜி மூலம் இயங்கக்கூடிய பேருந்துகள், கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் சேவை நிறுத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக இருக்கின்றனர்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2002ஆம் ஆண்டு முதல் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து ,ஆட்டோ, டாக்ஸி என 12 .30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சிஎன்ஜி மூலம் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மகாநகர் கேஸ் என்ற நிறுவனம் மும்பை, நவி மும்பை ,தானே உள்ளிட்ட நகரங்களில் குழாய்கள் மூலம் சிஎன்ஜியை விநியோகம் செய்து வருகிறது . ஏராளமான குடியிருப்புகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டு வீடுகளுக்கு தேவையான…

Read More
bitcoin1-1763438820

கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

  செய்திகள் கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 9:41 [IST] Share This Article நடப்பாண்டில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தந்த கிரிப்டோ சந்தை தற்போது பேரிழப்பை தந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் தங்கத்துக்கு அடுத்ததாக அதிக லாபம் தந்த ஒரு முதலீடாக கிரிப்டோ சந்தை இருந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதலே கிரிப்டோ சந்தையில் முதலீடுகள் அதிகரித்தன.டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ சந்தைக்கு சாதகமான நிலைப்பாடு கொண்டவர் என்பதால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கிரிப்டோ சந்தை வலுப்பெற தொடங்கியது. பிட்காயின் , எத்திரியம் போன்ற கிரிப்டோ நாணயங்களும், சொலோனா , ஈதர் போன்ற கிரிப்டோ டோக்கன்களின் மதிப்பும் வேகமாக உயர்ந்தன. கடந்த 20 அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத அளவாக பிட்காயினின்…

Read More