அட நம்ம திருச்சியா இது? அடையாளமே மாறுதே!! போட்டி போட்டு கொண்டு வரும் நிறுவனங்கள்!! – Allmaa
செய்திகள் அட நம்ம திருச்சியா இது? அடையாளமே மாறுதே!! போட்டி போட்டு கொண்டு வரும் நிறுவனங்கள்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 19, 2026, 11:15 [IST] Share This Article தமிழ்நாட்டின் மையத்தில் இருக்கக்கூடிய மாவட்டம் தான் திருச்சி. மாநிலத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு மாவட்டமாகவும் திருச்சி தற்போது இருந்து வருகிறது. திருச்சியில் தமிழ்நாடு அரசு பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக ஐடி வேலைகளை உருவாக்கும் டைடல் பூங்கா மற்றும் தொழில் பூங்காக்களை கட்டமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக 5 லட்சம் லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் எல்லாம் தொழில் உற்பத்தியை ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் இருக்கிறது.வேலைவாய்ப்பு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் திருச்சி வளர்ச்சி அடைந்து வரும் அதே…
