Breaking: அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!! திருச்சி, மதுரை,ஓசூர் மக்களுக்கு ஜாக்பாட்!!
செய்திகள் அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!! திருச்சி, மதுரை,ஓசூர் மக்களுக்கு ஜாக்பாட்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 15, 2026, 17:23 [IST] Share This Article இந்தியாவில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியுடன் முன்னிலையில் இருக்கக்கூடிய மாநிலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது தமிழ்நாடு. இந்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தொழில்துறை தான்.முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநிலத்தின் தொழில்துறையை மேம்படுத்துவதில் மிக தீவிரமாக இருக்கிறது. முதலில் முதலீட்டாளர் மாநாடு என்பது சென்னையில் நடக்கும். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என பிரத்தியேகமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. வாகன உற்பத்தி என்றாலே சென்னை தான் என்று இருந்த நிலைமையை மாற்றி ஓசூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாகன உற்பத்தி ஆலைகளை வெற்றிகரமாக நிறுவ வைத்திருக்கிறது.ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வாகன மற்றும் காலணி உற்பத்தி ஆலைகளை நிறுவி இருக்கிறது. அடுத்தடுத்து மாவட்டங்களை கவனம்…
