Breaking: 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!
செய்திகள் 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 11:33 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் யாரும் எதிர்பாராத வகையில் உலக அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி தங்கம் வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது . குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கட்டுக்கடங்காமல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.தங்கம் விலை: சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அக்டோபர் 17ஆம் தேதி அன்று 4,379.13 டாலர்கள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. இனி தங்கம் விலை உயராது என மக்கள் நிம்மதி அடைந்தனர்.…