பீகார் தேர்தல் முடிவுகள்: நிதிஷ் குமாரை மீண்டும் அரியணை ஏற்றிய பெண்கள்!! இந்த 2 திட்டங்களே காரணம்!!
செய்திகள் பீகார் தேர்தல் முடிவுகள்: நிதிஷ் குமாரை மீண்டும் அரியணை ஏற்றிய பெண்கள்!! இந்த 2 திட்டங்களே காரணம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 12:49 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டில் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக மாறி இருக்கிறது பீகார் சட்டமன்றத் தேர்தல். இந்த முறை வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் பீகாரில் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணியும் களம் கண்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் நிதிஷ்குமார் மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே சாதகமாக அமைந்துள்ளது. நிதிஷ்குமார் தான் மீண்டும் பீகார் முதலமைச்சராக போகிறார் என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த சட்டமன்ற தேர்தலில் பீகாரில் 67.13…