பட்ஜெட் முடிஞ்ச கையோடு அரோகரா சொன்ன பிரதமர் நரேந்திர மோடி..!!
செய்திகள் பட்ஜெட் முடிஞ்ச கையோடு அரோகரா சொன்ன பிரதமர் நரேந்திர மோடி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, February 1, 2026, 15:33 [IST] Share This Article 2026- 2027 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியான ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.பட்ஜெட்டில் பல்வேறு துறையினரும் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தனர். வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் இந்தியர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல மூத்த குடிமக்கள் தங்களுக்கு வரி சலுகை கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீட்டு கடன்களுக்கான வரி சலுகைகள் மற்றும் மலிவு விலை வீடுகளுக்கான வரையறைகள் மாற்றி அமைக்கப்படும் என கூறின.மற்றொருபுறம் தேர்தலை எதிர்கொண்டு இருக்க கூடிய மாநிலங்களுக்கு பிரத்தியேகமான திட்டங்கள் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது.…
