மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!!

  செய்திகள் மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 11:31 [IST] Share This Article நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் அண்மைக்காலமாக ஊழியர்களை சரியான முறையில் நடத்துவதில்லை என தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன .கடந்த ஜூலையில் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியானது தொடங்கி டிசிஎஸ் நிறுவனத்தின் மீது ஊழியர்கள் தொடர்ச்சியாக புகார்களை முன் வைத்த வண்ணம் இருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக ஊழியர்கள் பணிநீக்கம் என ஒரு எண்ணிக்கையை அறிவித்துவிட்டு மற்ற ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது என தொடர்ச்சியாக புகார்கள் முன்வைக்கப்படுகிறது.பல்வேறு ஊழியர்களும் ரெடிட் உள்ளிட்ட தளங்களில் டிசிஎஸ் தங்களை மோசமான முறையில் நடத்தி வேலையிலிருந்து…