4 ஆண்டு சரிவில் அமெரிக்க டாலர்! கவலைப்படாத டிரம்ப்? உலகையே அதிரவைத்த அதிபரின் ஒற்றை கமெண்ட்!
World 4 ஆண்டு சரிவில் அமெரிக்க டாலர்! கவலைப்படாத டிரம்ப்? உலகையே அதிரவைத்த அதிபரின் ஒற்றை கமெண்ட்! World oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Friday, January 30, 2026, 12:46 [IST] Share This Article டாலர் சரிந்தால் அமெரிக்க பொருளாதாரமும் சரிந்துவிடும் என்ற உலக பொருளாதார நிபுணர்களின், பொதுவான கவலையை தனது ஒற்றை கமெண்ட் மூலம் தவிடு பொடியாக்கி இருக்கிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப். கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க டாலர் குறியீடு அதன் மிக குறைந்த அளவான 95.56-க்கு சரிந்துள்ள நிலையில், இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இது மிகச்சிறந்த விஷயம் (I think it’s great) என்று டிரம்ப் கூலாக பதிலளித்துள்ளது உலக நிதி சந்தையை அதிர வைத்துள்ளது.பொதுவாக ஒரு நாட்டின் கரன்சி மதிப்பு வீழ்வது பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்படும். ஆனால் டிரம்ப்பின் அமெரிக்கா பர்ஸ்ட் (America First) கொள்கையின்படி,…
