Breaking: ஒவ்வொரு 10 கிராம் தங்க நகைக்கும் 1 கிராம் சேதாரமா? – தங்க நகைகளில் இவ்வளவு விஷயம் இருக்கா?
செய்திகள் ஒவ்வொரு 10 கிராம் தங்க நகைக்கும் 1 கிராம் சேதாரமா? – தங்க நகைகளில் இவ்வளவு விஷயம் இருக்கா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 16:51 [IST] Share This Article தங்கம் என்பது இந்தியாவில் ஒரு முதலீடாக மட்டுமல்ல நம்முடைய அந்தஸ்தாகவும் , நம் உணர்வுகளோடு தொடர்புடைய ஒரு விஷயமாகவும் இருக்கிறது. குழந்தைக்கு முதன் முதலில் போடப்படும் காதணியில் தொடங்கி நம் வாழ்வின் அனைத்து விசேஷங்களிலும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.தங்கம் ஒரு அவசர பண தேவைக்கு அடகு வைக்க பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாகவும் பார்க்கப்படுகிறது, தங்கத்திற்கும் இந்தியர்களுக்கும் இடையே உணர்வு ரீதியான ஒரு பிணைப்பு பாரம்பரியமாகவே நீடித்து வருகிறது, குறிப்பாக தங்க நகைகள் ஒரு குடும்பத்தின் அந்தஸ்தை நிர்ணயம் செய்யக்கூடிய விஷயமாக இருக்கிறது. பொதுவாகவே தங்கத்தை நாம் நாணயமாகவும் கட்டிகளாகவும் வாங்குவதை விட நகையாக வாங்கும்போது…
