Breaking: ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck
செய்திகள் ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 17:54 [IST] Share This Article இந்தியாவில் மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையானது ஒவ்வொரு சம்பள கமிஷனுக்கு பின்னரும் உயர்த்தி வழங்கப்படும். அதே போல ஓய்வூதிய தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியும் உயர்த்தி வழங்கப்படுகிறது.இந்த சூழலில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது 2025ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் படி ஓய்வூதியதாரர்களுக்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய தொகையோடு சேர்த்து அகவிலைப்படி உள்ளிட்ட…
