இந்திய சந்தையை கைவிட்டார்களா FPIs? 2025ல் வரலாறு காணாத வெளியேற்றம்; 2026-ல் மீட்சி ஏற்படுமா? – Allmaa
Market update இந்திய சந்தையை கைவிட்டார்களா FPIs? 2025ல் வரலாறு காணாத வெளியேற்றம்; 2026-ல் மீட்சி ஏற்படுமா? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Monday, December 29, 2025, 21:17 [IST] Share This Article இந்திய பங்குச் சந்தையை பொறுத்த வரையில், 2025ம் ஆண்டு பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு ஆண்டாக அமைந்துவிட்டது. உலகமே இந்திய பொருளாதார வளர்ச்சியை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள்(FPI) சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேறியுள்ளனர். இது சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான வருடாந்திர வெளியேற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.இது அமெரிக்க பத்திரங்களின் வட்டி விகித உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் சில துறைகளில் நிலவிய அதிகப்படியான…
