மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..
World மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO.. World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 15:32 [IST] Share This Article அமெரிக்கா: திறன்மிகு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து வேலை செய்வதை குறைக்க வேண்டும், அமெரிக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.அமெரிக்காவிற்கு வெளிநாட்டவர்கள் வருகை தருவது, குடியுரிமை பெறுவது, வேலைவாய்ப்பு பெறுவது ஆகியவற்றை கட்டுப்படுத்தி பல நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்1பி விசா உள்ளிட்ட விசாக்கள் மூலம் வெளிநாட்டவர்களை அமெரிக்கா வரவழைத்து வேலைக்கு அமர்த்துவதை கட்டுப்படுத்தியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களும் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்துவது என பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.தன்னுடைய இந்த நடவடிக்கை அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை ஏற்படுத்தி தரும்…