லீவு நாள்ல கூட மேனேஜர் போன் பண்றாரா? போன் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!! சட்டமே வரப் போகுது!!
செய்திகள் லீவு நாள்ல கூட மேனேஜர் போன் பண்றாரா? போன் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!! சட்டமே வரப் போகுது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 7, 2025, 8:41 [IST] Share This Article டெல்லி: இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லக் கூடியவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது விடுமுறை நாட்களிலும் அலுவலக நேரம் முடிந்த பின்னரும் மேலாளர்கள் அல்லது நிறுவன உரிமையாளர்கள் அலுவலக ரீதியான விஷயங்களுக்காக போன் செயவது அல்லது மின்னஞ்சல்களை அனுப்புவது.தனியார் நிறுவனங்களில் அலுவலக நேரம் என நிர்ணயிக்கப்பட்ட நேரம் இருந்தாலும் அதனை முடித்துவிட்டு ஊழியர்கள் வீடு திரும்பிய பின்னரும் மேனேஜர்கள் பணி ரீதியாக போன் கால் செய்வது என்பது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக அலுவலக நேரம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்னரும் அலுவலக வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஊழியர்கள் ஆளாகின்றனர். விடுமுறை நாளில் குடும்பத்தினருடன்…
