சீனாவை மிஞ்ச துடிக்கும் இந்தியா! பாதுகாப்புத் துறையில் காத்திருக்கும் ரூ.7 ட்ரில்லியன் வாய்ப்பு!
செய்திகள் சீனாவை மிஞ்ச துடிக்கும் இந்தியா! பாதுகாப்புத் துறையில் காத்திருக்கும் ரூ.7 ட்ரில்லியன் வாய்ப்பு! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 18:48 [IST] Share This Article உலக அரங்கில் இந்தியா தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கி வருகிறது. இதுவரை ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான பெரும்பாலும் அயல் நாடுகளைச் சார்ந்து நின்ற காலம் போய், சொந்தமாக உற்பத்தி செய்யும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே இதற்காக இந்திய அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. தற்போது சீனாவை விஞ்சும் அளவுக்கு, இந்தியா பாதுகாப்பு துறையில் முன்னேற்றம் உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிக்க பிரமாண்ட திட்டங்களைத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஆத்ம நிர்பார் திட்டத்தின் உந்துதலால், முதலீட்டாளர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக மாறியுள்ளது.வரும் ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு துறையில் காத்திருக்கும் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தையானது, இந்திய ராணுவத்திற்கு…
