Breaking: இனி AI தான் உங்களோட சக ஊழியர்!! அமேசான் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!!
செய்திகள் இனி AI தான் உங்களோட சக ஊழியர்!! அமேசான் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 10, 2025, 12:01 [IST] Share This Article லாஸ் வேகாஸ், அமெரிக்கா: பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய அன்றாட வேலைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அதிகரித்துவிட்டன. ஏஐ ஏஜெண்டுகள் தான் தற்போது நம்முடைய வேலைகளை படிப்படியாக பறிக்க தொடங்கிவிட்டன.வாடிக்கையாளர் சேவை, கோடிங் , ஹெச்ஆர், என பல வேலைகளும் ஏஐ வசம் சென்று வருகின்றன. இப்படி நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் அமேசான் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஊழியர்கள் ஒரு மென்பொருள் கருவியாக மட்டும் கருதக்கூடாது என தெரிவித்திருக்கும் அமேசான் நிறுவனம் அதை உங்களுடன் வேலை…
